இந்தியாவில் பிறந்தவர் பின் இங்கிலாந்துக்கு சென்றவர் ராப் பாடகி ஹர்ட் கவுர்
Lucknow: யோகி ஆதித்யநாத்க்கு, ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக பதிவுகளை போட்ட ஹர்ட் கவுர் மீது தேசத் துரோக வழக்கு.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ராப் பாடகி ஹர்ட் கவுர் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜகவின் கருத்தியல் பெற்றோரான ஆர்.எஸ்.எஸ் இணைந்து இந்த வழக்கினை பதிவு செய்துள்ளது.
39 வயதான பாடகி ஹர்ட் கவுர் திங்களன்று இண்ஸ்டாகிராமில் போட்ட பதிவுகளுக்காக இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. தேச துரோகத்தை உள்ளடக்கிய இந்திய தண்டனைச் சட்டத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வாரணாசியில் ஹர்ட் கவுருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகாரை வழக்கறிஞர் சஷாங்க் சேகர் தாக்கல் செய்தார். மேலதிக விசாரணைக்கு சைபர் குற்ற விசாரணை பிரிவுக்கு அனுப்பப்படும் எனத் தெரிகிறது. ஹர்ட் கவுர் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் புகைப்படங்களை இரண்டு பதிவுகளில் பயன்படுத்தியிருந்தார்.
ஹர்ட் கவுர் இந்தியாவில் பிறந்து பின் இங்கிலாந்து சென்றார். ‘கிளாஸி' மற்றும் ‘மூவ் யுவர் பாடி' என்ற பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.