Read in English
This Article is From Oct 04, 2019

PM Modi-க்கு எழுதிய கடிதம்… இயக்குநர் மணி ரத்னம் உட்பட 49 பிரபலங்கள் மீது Sedition வழக்கு!

Sedition Case - திரைப்பட இயக்குநர் Mani Ratnam, இயக்குநர் அனுராக் காஷ்யப், ஷியாம் பெனகல், சுபா முத்கல் உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதினார்கள்.

Advertisement
இந்தியா Edited by

Sedition Case - சுமார் 2 மாதங்களுக்கு முன்னர் பிகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர், 49 பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டார்

Muzaffarpur:

கூட்டு வன்முறைக்கு (Mob Violence) எதிராக குரல் கொடுக்கும் வகையில் நாட்டில் இருக்கும் சுமார் 50 பிரபலங்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு (PM Narendra Modi) சில வாரங்களுக்கு முன்னர் கடிதம் எழுதினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகார் மாநில முசாஃபர்பூர் காவல் நிலையத்தில், தேசத் துரோக வழக்கு (Sedition Case) தொடரப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. 

சுமார் 2 மாதங்களுக்கு முன்னர் பிகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர், 49 பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டார். தற்போது மாஜிஸ்த்ரேட் சூர்ய காந்த், வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். 

இந்திய அளவில் 49 பிரபலங்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதினார்கள்.

இது குறித்து ஓஜா தாக்கல் செய்த மனுவில், “நாட்டின் பெயருக்குக் கலங்கும் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் துடிப்பு மிக்கச் செயலையும் அவர்கள் தாழ்த்திக் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு பிரிவுக்குச் சாதகமாக அவர்கள் செயல்பட்டுள்ளனர்” என்று குற்றம் சாட்டப்பட்டது. 

இதைத் தொடர்ந்து தற்போது தேசத் துரோகம், பொது அமைதியைக் குலைத்தல், மத உணர்வைப் புண்படுத்துதல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

திரைப்பட இயக்குநர் மணி ரத்னம், பாலிவுட் திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப், ஷியாம் பெனகல், நடிகை சுமித்ரா சேட்டர்ஜி, சுபா முத்கல் உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதினார்கள். அவர்கள் எழுதிய கடிதத்தில், “முஸ்லிம்களுக்கு, தலித்துகளுக்கு, சிறுபான்மையினருக்கு எதிரான கூட்டு வன்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எதிர் கருத்து இல்லாமல் ஜனநாயகம் இல்லை. ஜெய் ஸ்ரீ ராம் என்கிற கோஷம், வன்முறையைத் தூண்ட பயன்படுத்தப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

Advertisement
Advertisement