This Article is From Feb 21, 2020

’பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ முழக்கம் எழுப்பிய இளம்பெண் தேசத்துரோக வழக்கில் கைது!

நேற்று மாலை அந்த நிகழ்ச்சி நிறைவடைந்தும் கைது செய்யப்பட்ட அந்த பெண் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமுல்யாவுக்கு ஜாமின் மறுக்கப்பட்டதை தொடர்ந்து, 3 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Bengaluru:

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பெங்களூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய இளம்பெண்ணைத் தேசத்துரோக வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். 

அனைத்திந்திய மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் சார்பில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமுல்யா என்ற இளம்பெண் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக, வெளிவந்துள்ள வீடியோவில், இளம்பெண் அமுல்யா திடீரென மேடையேறி ”பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என முழக்கம் எழுப்புகிறார். உடனடியாக அசாதுதீன் ஓவைசி எம்.பி., அந்த பெண்ணிடமிருந்து மைக்கை பறிக்க முற்பட்டார். ஆனாலும், தொடர்ந்து அந்த பெண் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினார். பின்னர் அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் அந்த பெண்ணிடமிருந்து மைக்கை பிடுங்கினர். 

தொடர்ந்து, மைக் எதுவும் இல்லாமல், மேடை முன்பு வந்த அமுல்யா, இந்துஸ்தான் ஜிந்தாபாத்துக்கும், பாகிஸ்தான் ஜிந்தாபாத்துக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால்... என்கிறார். அப்போது, குறுக்கிடும் ஓவைசி அந்த பெண்ணிடம் என்ன பேசுகிறாய் என்கிறார். தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அனைவரும் அந்த பெண்ணை மேலும் பேச விடாமல் தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர். 

தொடர்ந்து, நேற்று மாலை அந்த நிகழ்ச்சி நிறைவடைந்தும் கைது செய்யப்பட்ட இளம்பெண் அமுல்யா மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி ரமேஷ் கூறும்போது, அந்த பெண்ணுக்கு எதிராக சட்டப்பிரிவு 124A (தேசத்துரோகம்) 153Aமற்றும்B (இரு பிரிவினரிடையே வன்முறையைத் தூண்டுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார். 

j6ji0mj

”பாகிஸ்தான் ஜிந்தாபாத்” முழக்கம் எழுப்பிய பெண்ணை மேடையில் இருந்து கீழ் இறக்க பலரும் முயற்சி செய்கின்றனர்.

தொடர்ந்து, இளம்பெண் அமுல்யா தரப்பில் ஜாமின் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை நிராகரித்த நீதிமன்றம், அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. தொடர்ந்து, உள்ளூர் நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை வரும் திங்கள்கிழமை விசாரிக்க உள்ளது. 

இதனிடையே, ஓவைசி மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சி குறித்து கர்நாடகா பாஜக தனது ட்வீட்டர் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளது. சிஏஏவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்”என்று அசாதுதீன் முன்பே அமுல்யா என்ற அந்த இளம்பெண் முழக்கமிடுகிறார். உண்மை என்னவென்றால், #CAAக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பாகிஸ்தான் மற்றும் காங்கிரஸ் @INCIndia தலைமையிலான தேசிய எதிர்ப்புப் படைகளுக்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும். பாகிஸ்தானை ஆதரிப்பவர்கள் என்றென்றும் அங்கு செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. 

இதுதொடர்பாக அசாதுத்தீன் ஓவைசி கூறும்போது, அந்தப் பெண்ணிற்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், சர்ச்சைக்குரிய அந்த பெண்ணிற்குத் தான் கண்டனம் தெரிவிப்பதாகவும், அந்த பெண்ணை இந்தக்கூட்டத்திற்கு அழைத்து வந்திருக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், இப்படியான நிகழ்வுகள் இந்த மேடையில் நடைபெறும் என்று முன்னரே தெரிந்திருந்தால் தான் இங்கு வந்திருக்கவே மாட்டேன் என்றும், “நாங்கள் இந்தியாவுக்காக இருக்கின்றோம், எங்களுடைய எதிரி நாட்டினை நாங்கள் ஆதரிக்கவில்லை, எங்களுடைய முழு உந்துதலும் இந்தியாவை காப்பாற்றுவதற்கானதேயாகும்.” என்று ஓவைசி விளக்கம் அளித்துள்ளார்.

(With inputs from PTI, ANI)

.