மறைந்த முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை சீமான் திருமணம் செய்தார். இவர்களது திருமணம் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் நடந்தது.
இந்நிலையில், திருமணமாகி 5 அண்டுகள் ஆன நிலையில் சீமான்-கயல்விழி தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவம் நடந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, பிறந்த குழந்தையை சீமான் கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால், நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.