Seeman News - நாம் தமிழர் கட்சி சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் கு.கந்தசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் பிரசாரம் செய்தார்
தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்க உள்ளது. இதில் அதிமுக, திமுக கூட்டணியைத் தவிர்த்து, நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளது.
நாம் தமிழர் கட்சி சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் கு.கந்தசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுபவர்களை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தார்.
மேலும், அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய தண்டனை குறித்தும் பேசினார். “ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுபவர்கள் தமிழர்களா..? இல்லை, அவர்கள் தமிங்கிழர்கள்… டங்கிலிஷ்காரர்கள்…” என்றார் சீமான்.
மேலும் அவர், “பனை மரத்திலிருந்து பச்சை மட்டை எடுத்து வந்து, ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவோரை சட்டையைக் கழற்றி அடிக்க வேண்டும். தோலுரிந்த இடத்தில் உப்பைத் தடவிவிட்டு அப்படியே வேடிக்கைப் பார்க்க வேண்டும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
நடிகர் ரஜினிகாந்த் குறித்துப் பேசிய சீமான், “70 வயதானவரை தலைவன் என்றும், 60 வயது அப்பாவைக் கிழவன் என்றும் கூப்பிடும் மானமிழந்த இனம் இங்குதான் உள்ளது” என்று சரவெடியாக பேசினார்.