சென்னை வடபழனியில் நடைபெற்ற நாம் தமிழர் நிகழ்ச்சியில் பங்கேற்ற சீமான் மேடையில் பேசியதாவது,
கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும்போது அரசியலுக்கு வந்த விஜயகாந்த் தான் உண்மையான ஆண்மகன். இந்த கமல்ஹாசன், ரஜினிகாந்த் எல்லாம் பேசக்கூடாது. நீங்கள் எல்லாம் ஹீரோக்கள் அல்ல ஜீரோக்கள்.
சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் பேசினால், ஆமாம் பேசினேன் என்று செல்ல வேண்டாமா? அதைத்தவிர்த்து, அம்மா ஜெயலலிதா மீது நான் ரொம்ப பற்று கொண்டவன் என்கிறார். ஒரு விரல் புரட்சியாம், என்ன புரட்சி? என் படத்தில் நடிக்க மாட்டார். ஆனால், நான் பேசுவதை எல்லாம் பேசி நடிப்பார். என்ன செய்வது தம்பியாக போய்விட்டார்.
தமிழத்தில் இனிமேல் என் தம்பி சிலம்பரசன் தான் சூப்பர் ஸ்டார். அவனை வைத்து 3 படம் எடுப்பது என்று முடிவு செய்துவிட்டேன். சிம்பு தான் ரியல் சூப்பர் ஸ்டார் என புகழ்ந்து தள்ளினார்.
தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். எடப்பாடி பழனிசாமிக்கெல்லாமா பயப்பட வேண்டும்? என்று அவர் தொண்டர்கள் மத்தியில் கேள்வி எழுப்பினார்.