This Article is From Oct 26, 2019

இடைத் தேர்தல் முடிவுகளால் துவளாத Seeman… எதிர்கட்சிகளுக்கு விட்ட ‘2021’ சவால்..!

Seeman on By-election Result - "வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் எங்கள் ஆட்டத்தைப் பாருங்கள். சும்மா நின்னு விளையாட்றோம்"

இடைத் தேர்தல் முடிவுகளால் துவளாத Seeman… எதிர்கட்சிகளுக்கு விட்ட ‘2021’ சவால்..!

Seeman on By-election Result - "இடைத் தேர்தல் என்பதால், தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை. ஆளுங்கட்சி சுலபமாக, ஓட்டுக்கு 2,000 ரூபாயை வாரி இரைத்த"

Seeman on By-election Result - தமிழகத்தில் காலியாக இருந்த சட்டமன்றத் தொகுதிகளான விக்கிரவாண்டி (Vikravandi) மற்றும் நாங்குநேரிக்கு (Nanguneri), கடந்த 21 ஆம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இரு தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான அதிமுக-வே (ADMK) வென்றுள்ளது. விக்கிரவாண்டியில் திமுக-வும், நாங்குநேரியில் திமுக (DMK) கூட்டணியில் இருந்த காங்கிரஸும் (Congress) போட்டியிட்டன. 

இரண்டு தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் இரண்டாம் இடத்தையே பிடிக்க முடிந்தது. சீமான் (Seeman) தலைமையிலான நாம் தமிழர் கட்சி (Naam Tamilar Katchi), விக்கிரவாண்டி தொகுதியில் 3 ஆம் இடத்திலும், நாங்குநேரி தொகுதியில் 4 ஆம் இடத்திலும் வந்தது. 

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான், “நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் நாங்கள், தமிழக அளவில் 17 லட்சம் வாக்குகள் வாங்கினோம். அப்போது தேர்தல் ஆணையம் மிகவும் கறாராக செயல்பட்டது. அதனால், பணப் பட்டுவாடா கொஞ்சம் தடுக்கப்பட்டது. தற்போது இடைத் தேர்தல் என்பதால், தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை. ஆளுங்கட்சி சுலபமாக, ஓட்டுக்கு 2,000 ரூபாயை வாரி இரைத்தது. பணம்தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது. இந்த முடிவை வைத்து கட்சியின் வளர்ச்சியை கணிக்க முடியாது.

இந்திய அளவில் இரண்டு பணக்கார மாநிலக் கட்சிகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது திமுக, அடுத்த இடத்தில் இருப்பது அதிமுக. அப்படிபட்ட பணக்கார கட்சிகளுடன் நாங்கள் களத்தில் நிற்கிறோம். அதுதான் பெரிய விஷயம். வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் எங்கள் ஆட்டத்தைப் பாருங்கள். சும்மா நின்னு விளையாட்றோம்,” என்று நம்பிக்கைத் ததும்ப பேசியுள்ளார். 
 

.