This Article is From Dec 20, 2019

“கைலாசாவுக்குப் போறேன்… என் அதிபர் நித்தியானந்தா!”- Seeman போட்ட குண்டு..!

Seeman about Nithyananda - "என்னைப் பிடிக்காது என்பதால் என்னை இந்த நாட்டின் குடிமகன் இல்லை என்று முத்திரைக் குத்துவீர்கள்"

Advertisement
தமிழ்நாடு Written by

Seeman about Nithyananda - "எனக்கு ஒரு கவலையும் கிடையாது. நான் கைலாசாவிற்குச் சென்று விடுவேன். என் அதிபர் நித்தியானந்தா இருக்கிறார்"

Seeman about Nithyananda - குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் (CAA) திரும்பப் பெறக்கோரி நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இணைந்து சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் முன்னெடுத்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழரின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman), சிறப்புரை ஆற்றினார். அப்போது, “எனக்கு குடியுரிமை ரத்து செய்யப்பட்டால் கைலாசா நாட்டிற்குச் செல்வேன்,” என்று பேசி அதிரவைத்துள்ளார். 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்பது குறித்து பேசிய சீமான், “இந்தச் சட்டத் திருத்தத்தை மற்றவர்கள் ஏற்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்பதற்காக நாம் இந்தப் போராட்டத்தைச் செய்யவில்லை. நாம் இதை உளமார செய்கிறோம்.
தமிழர்கள் நாம் மனித நேயவாதிகள் அல்ல உயிர்மநேயவாதிகள்.

நுட்பமாக நாம் நோக்கினால் "பிறப்பொக்கும் எல்லா உறவுக்கும்" என்று போதிக்காமல் "பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்" என்று போதிக்கிறது தமிழ் மறை. அதேபோல் பகுத்துத்துண்டு பல்உறவுகள் ஓம்புதல் என்று போதித்திருக்கலாம். ஆனால் பகுத்துண்டு பல்லுயிர்கள் ஓம்புக என்று போதிக்கிறார் நமது பாட்டன் வள்ளுவர். அதில் ஈ, எறும்பு உட்பட அனைத்து உயிர்களும் அடங்குகின்றன.

அதன் வெளிப்பாடுதான் அன்பு உறவுகளே இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்த கணியன் பூங்குன்றனார்.. "யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்று பாடியது. அப்படி உலகந்தழுவி நேசித்தவர்கள் தமிழர்கள். 

Advertisement

நாங்கள் இனவாதிகள் அல்ல; அழிந்து கொண்டிருக்கிற எங்கள் இனத்தை மீட்ருவாக்கம் செய்ய வந்தவர்கள். நாங்கள் உலகப் பொதுமைக்குப் போராட வந்தவர்கள். அப்படித்தான் நாங்கள் ரோஹிங்கியா மக்களுக்கு, ஈராக் மக்களுக்கு, சோமாலியா மக்களுக்கு ஆதரவாகப் போராடினோம்.

இங்கு யாரும் வரலாம் வாழலாம். "வாழும் உரிமை இங்கு எவர்க்கும் உண்டு; ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு.' வந்தவரை எல்லாம் வாழ வைப்போம் அது எம்மினத்தின் பெருமை; இனி எம் சொந்தவரை மட்டுமே ஆள வைப்போம். அது எம் இனத்தின் அடிப்படை அரசியல் உரிமை,” என்று உரையாற்றிய அவர் தொடர்ந்து கேலியாக, 

“உங்களுக்குச் சீமானைப் பிடிக்காது. எனக்கான குடியுரிமையை நிரூபிக்கச் சொல்லி கேட்பீர்கள். நான் என் தாத்தன், பூட்டனின் பத்திரத்தை எல்லாம் கொண்டு வந்து சமர்பிப்பேன். அப்படியும் என்னைப் பிடிக்காது என்பதால் என்னை இந்த நாட்டின் குடிமகன் இல்லை என்று முத்திரைக் குத்துவீர்கள். எனக்கு ஒரு கவலையும் கிடையாது. நான் கைலாசாவிற்குச் சென்று விடுவேன். என் அதிபர் நித்தியானந்தா இருக்கிறார்,” எனச் சிரித்தார். 

Advertisement
Advertisement