This Article is From Dec 09, 2019

“தலைக்கவசம் போட்டு வெங்காயம் விக்கிறான்… என்னத்த சொல்ல”- வெளுத்துவாங்கும் Seeman!

Seeman News - "சொந்த நாட்டு மக்களுக்கே வெங்காயம் இல்லாத போது அதை எப்படி ஏற்றுமதி செய்யலாம்"

Advertisement
தமிழ்நாடு Written by

Seeman News - "செல்போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்று விளம்பரம் வைக்கிறார்கள்"

Seeman News - இந்திய அளவில் வெங்காயத்தின் விலை, கிலோவுக்கு 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. நாடாளுமன்றம் வரை இது பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அது குறித்து கறாரான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

செய்தியாளர்கள் மத்தியில் இது குறித்துப் பேசிய சீமான், “நம் நாட்டின் அரசு அனைவருக்கும் வாகனத்தையும் அலைபேசியையும் கொடுப்பதற்குத் திட்டம் வைத்துள்ளது. ஆனால் நீரையும் சோறையும் எல்லோருக்கும் வழங்குவதற்கு அதனிடம் திட்டம் கிடையாது. வெங்காயத்தை அதிக அளவில் ஏற்றுமதி செய்த காரணத்தினால்தான் தற்போது தட்டுப்பாடு நிலவுவதாக சொல்கிறார்கள். சொந்த நாட்டு மக்களுக்கே வெங்காயம் இல்லாத போது அதை எப்படி ஏற்றுமதி செய்யலாம். இது ஒரு அடிப்படை அறிவு இல்லையா?

சில இடங்களில் பார்க்கிறோம், வெங்காயத்தை தலைக்கவசம் போட்டுக் கொண்டு வியாபாரம் செய்கிறார்கள். தலைக்கவசம் இல்லையென்றால், அடித்து நொறுக்கிவிட்டு எடுத்துச் சென்று விடுவார்கள் என்ற பயம்தான். அதேபோல, செல்போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்று விளம்பரம் வைக்கிறார்கள். இதுவெல்லாம் காலக் கொடுமை…” என்றார். 

முன்னதாக வெங்காய விலை உயர்வு பற்றி, நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வியெழுப்பியபோது, “நான் அதிகம் வெங்காயம், பூண்டு சாப்பிடாத குடும்பத்திலிருந்து வந்தவர். எனக்கு அதன் நிலை குறித்து பெரிதாக தெரியாது,” என்றார். அதற்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர், ப.சிதம்பரம், “நிதி அமைச்சர் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்றால் என்ன அவகோடா பழம்தான் சாப்பிடுவாரா?,” என கேலிக் கேள்வியெழுப்பினார். 

Advertisement

ராகுல் காந்தியும், “நிதி அமைச்சரிடம் அவர் என்ன சாப்பிடுகிறார் என்று யாரும் கேட்கவில்லை. நாட்டின் பொருளாதாரம் பற்றித்தான் கேட்கப்பட்டது,” என்றார். 

Advertisement