This Article is From Nov 04, 2019

‘பிரச்னையே இல்லாம இருக்குல… அதான்!’- திருவள்ளுவர் விவகாரத்தில் BJPக்கு Seeman கடும் எச்சரிக்கை!

Thiruvalluvar row- "இது ஒன்றும் அவர்களுக்குப் புதியதல்ல" - Seeman

‘பிரச்னையே இல்லாம இருக்குல… அதான்!’- திருவள்ளுவர் விவகாரத்தில் BJPக்கு Seeman கடும் எச்சரிக்கை!

காவி உடை அணிந்த திருவள்ளுவரின் படங்களைப் பகிர்ந்திருந்துள்ளது பாஜக

Thiruvalluvar row- தஞ்சை, பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை (Thiruvalluvar statue) அவமதிக்கப்பட்டுள்ளது தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கின்றன. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜக (BJP) தலைவர்கள், அவர்களின் ட்விட்டர் பக்கங்களில் மற்றும் தமிழக பாஜக-வின் ட்விட்டர் பக்கத்தில், காவி உடை அணிந்த திருவள்ளுவரின் படங்களைப் பகிர்ந்திருந்தனர். இதுவும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து இது குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman), “தமிழகத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பதால், புதியதாக ஒரு பிரச்னையைக் கிளப்பப் பார்க்கிறார்கள் பாஜக-வினர். எல்லாவற்றுக்கும் பொதுவாக இருக்கும் பொதுமறை திருக்குறள். அதை இயற்றிய வள்ளுவப் பெருமகனாரை, தன்வயப்படுத்தப் பார்க்கிறது பாஜக. அதன் ஒரு பகுதியே, அவருக்கு காவி உடை அணிந்தது போன்ற படங்களைப் பகிர்ந்தது.

இது ஒன்றும் அவர்களுக்குப் புதியதல்ல. நம் பண்பாட்டின், கலாசாரத்தின் பல முன்னோர்களை தன்வயப்படுத்தியுள்ளது இந்து மதம் மற்றும் பாஜக. தற்போதும் அதை மீண்டும் செய்யப் பார்க்கிறார்கள்.

மேலும், பொது அமைதியைக் குலைக்கும் வகையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. பண்பட்ட தமிழ்ச் சமூகம், எல்லாவற்றுக்கும் அமைதியாக இருக்காது. தங்கள் மானத்துக்கு இழக்க ஏற்படும் பட்சத்தில் அவர்கள் பொங்கி எழுவார்கள். அது யாருக்கும் நல்லதல்ல. அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள், திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார். 

.