சீமாஞ்சல் விரைவு ரயில் தடம் புரண்டதில் 3 பெட்டிகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
New Delhi: பீகாரில் சீமாஞ்சல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பீகாரின் ஜோக்பானி நகரில் இருந்து டெல்லி ஆனந்த் விகார் நோக்கி செல்லும் சீமாஞ்சல் விரைவு ரயில் இன்று அதிகாலை பீகார் மாநிலம் வைஷாலி அருகே முழு வேகத்தில் சென்று கொண்டிருந்த போது, தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. அதில், 3 பெட்டிகள் தடம் புரண்டதில் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, இரண்டு தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால், அந்த வழிதடத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். 14 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
With inputs from agencies