This Article is From Oct 03, 2019

Keezhadi: தமிழர் நாகரீகமா? திராவிடர் நாகரீகமா? - என்ன சொல்கிறார் Seeman..?

Keezhadiயில் தமிழ் எழுத்துகள் தொடர்பான ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன. அதை திராவிட எழுத்து என்றோ, இந்திய கலாசார கூறு என்றோ சொல்ல முடியுமா? - Seeman

Keezhadi: தமிழர் நாகரீகமா? திராவிடர் நாகரீகமா? - என்ன சொல்கிறார் Seeman..?

2,600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா ஏது. keezhadiயை திராவிட நாகரீகமா, இந்தியப் பண்பாடா என்று கேட்பதெல்லாம் வெற்றுக் கூச்சல் - Seeman

சிவகங்கை மாவட்டம் கீழடியில் (Keezhadi)) தொடர்ந்து தொல்லியல் துறை ஆராய்ச்சி செய்து வருகிறது. அங்கு கிடைத்திருக்கும் பொருட்கள் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொல்லப்படுகிறது. கீழடி ஆய்வைத் தொடர்ந்து அது திராவிட நாகரீகமா அல்லது தமிழர் நாகரீகமா என்பது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman). 

செய்தியாளர்களுக்கு மத்தியில் சீமான் பேசுகையில், கீழடி குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், “முதலில் கீழடி ஆய்வை நடத்தி வரும் அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஒரு வேண்டுகோள். தமிழ் முன்னோர்கள் 2, 3 ஏக்கரில் வாழ்ந்தவர்கள் அல்ல. 100, 150 ஏக்கர் பரப்பளவில் வாழ்ந்து வந்தவர்கள். எனவே, வெறுமனே 2 ஏக்கரில் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தற்போது ஆய்வு நடந்துவரும் இடத்தைச் சுற்றியுள்ள 100, 150 ஏக்கரிலும் அடுத்தடுத்தகட்ட ஆய்வு நடத்தப்பட வேண்டும். 

ஆய்வு நடக்கும் இடத்தில் முறையான மேற்கூரையிட்டு, பாதுகாப்பு கொடுத்து நடத்தப்பட வேண்டும். பேச்சுக்கு ஆய்வு நடத்தப்படக் கூடாது.

கீழடியில் தமிழ் எழுத்துகள் தொடர்பான ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன. அதை திராவிட எழுத்து என்றோ, இந்திய கலாசார கூறு என்றோ சொல்ல முடியுமா?

2,600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா ஏது. கீழடியை திராவிட நாகரீகமா, இந்தியப் பண்பாடா என்று கேட்பதெல்லாம் வெற்றுக் கூச்சல். திராவிடர் என்றால், யார். திராவிடர்தான் தமிழர், தமிழர்தான் திராவிடர் என்றால், ஏன் கீழடி தமிழர் நாகரீகமாக இருக்கக் கூடாது. ஆனால் திராவிட இயக்கங்கள், இதை திராவிட நாகரீகம் என்றுதான் சொல்லும்.

திராவிட நாகரீகம் என்றால், அதற்கு எதாவது சான்று இருக்கிறதா. தமிழனுக்கு எந்தப் பெருமையும் சேர்ந்துவிடக் கூடாது என்பதில் இவர்கள் கவனமாக இருக்கிறார்கள். அதனால்தான் இப்படி திட்டமிட்டு கருத்துகள் கிளப்பப்படுகின்றன” என்று தெரிவித்தார். 

.