This Article is From Nov 22, 2018

“எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டது ஆட்டிறைச்சிதான்”- அசைவ பிரியர்கள் நிம்மதி

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் அசைவப் பிரியர்கள் மத்தியில் பேரச்சத்தை ஏற்படுத்திய விவகாரத்திற்கு தற்போது முடிவு கிடைத்திருக்கிறது.

Advertisement
Tamil Nadu Posted by

எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டிருப்பது ஆட்டிறைச்சிதான் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் அசைவப் பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் கடந்த 17-ம்தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து மன்னார் குடிக்குசெல்லும் ரயில் வந்தது. இந்த ரயிலில் அழுகிய இறைச்சிகள் கடத்தப்படுவதாக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே பெட்டியில் இருந்து இறைச்சியில் நீண்டவால் பகுதி காணப்பட்டது. ஆடுகளுக்கு நீண்ட வால் இருக்காது என்பதால், இந்த இறைச்சி நாய் இறைச்சிதான் என பரவலாக பேசப்பட்டது. தொடர்ந்து தொலைக்காட்சியில் இந்த விவகாரம் நேரலை செய்யப்பட்டதால் அசைவப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏற்கனவே ஹோட்டல்களில் சப்ளை செய்யப்பட்ட இறைச்சி நாய் இறைச்சியாக இருக்கக் கூடும் என்ற அச்சம் பரவலாக ஏற்பட்டது. இந்த நிலையில் சென்னை கால்நடை மருத்துவமனையில் நடைபெற்று வந்த சோதனை முடிவுக்கு வந்து முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் எழும்பூரில் கைப்பற்றப்பட்ட இறைச்சி ஆட்டிறைச்சிதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement