தேசிய அளவில் பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க மக்கள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) சுய ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இந்த சுய ஊரடங்கு உத்தரவினை அடுத்த நாள் காலை 5 மணி வரையில் இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
தழிக முதல்வர் பழனிசாமி வௌியிட்ட அறிவிப்பில் இந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு முழுமையாக அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.
மேலும், இன்று முதல் இம்மாத இறுதியான 31-ம் தேதிவரை சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக மாநில முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். மேலும், மாநிலங்களுக்கிடையேயான அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மார்ச் 31-ம் தேதி நள்ளிரவு வரை ரத்து செய்யப்படுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களைத் தனிமைப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.