This Article is From Oct 11, 2018

கொலை வழக்கு: சாமியார் ராம்பால் குற்றவாளி எனத் தீர்ப்பு!

சாமியார் ராம்பால் இரண்டு கொலை வழக்குகளில் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது ஹரியானா நீதிமன்றம்

கொலை வழக்கு: சாமியார் ராம்பால் குற்றவாளி எனத் தீர்ப்பு!

ராம்பால், 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த யோகி கபீரை பின்பற்றுபவர் ஆவார்

New Delhi:

சாமியார் ராம்பால் இரண்டு கொலை வழக்குகளில் இன்று குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது ஹரியானா நீதிமன்றம். இதையடுத்து, ஹிசார் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. 

68 வயதாகும் ராம்பால், 2006 ஆம் ஆண்டு, கிராமத்தினர் சிலர் மீது தீ வைக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒருவர் மரணமடைந்தார். 6 பேருக்குக் காயம் ஏற்பட்டது. இது குறித்தான வழக்கில் தான், தற்போது ராம்பால் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 16 ஆம் தேதி, தண்டனை குறித்து விவரம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், சட்ட ஒழுங்கை சீராக வைத்திருக்க, ஹிசாரில் 2,000 காவல் துறையினர் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளதாக ஹரியானா மாநில அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ராம்பால், 2014 ஆம் ஆண்டு, ஹிசாரில் இருக்கும் அவரது ஆசிரமத்தில் கைது செய்யப்பட்டார். காவலர்கள் கைது செய்ய முயன்ற போது, ராம்பால் ஆதரவாளர்கள், அவர்கள் மீது கற்கள், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் வைத்து தாக்குதல் நடத்தினார்கள். ஒரு கட்டத்தில் ராம்பால், தனது ஆதரவாளர்களை மனித கேடயமாகக் கூட பயன்படுத்தினார். 

இது தொடர்பாக பதியப்பட்ட வழக்கில், ராம்பால், குற்றவாளி இல்லை என்று சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. ராம்பால், 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த யோகி கபீரை பின்பற்றுபவர் ஆவார். 


 

.