Read in English
This Article is From Jun 01, 2018

தினமும் 2 லட்சம் சாப்பாடா.. ஆச்சர்யப்பட்ட நெதர்லாந்து ராணி!

இங்கிலாந்து அரச குடும்பத்துடனும் மும்பை டப்பாவாலாக்கள் மிகுந்த நெருக்கம் உடனே இருந்து வருகின்றனர்

Advertisement
Mumbai

Highlights

  • நெதர்லாந்து ராணி மாக்ஸிமா கடந்த திங்கள் கிழமை இந்தியாவுக்கு வந்தார்
  • மஹாராஷ்டிரிய முறையில் ராணி மாக்ஸிமாவுக்கு வரவேற்பு
  • டப்பாவாலாக்கள் பற்றி ராணி மாக்ஸிமா ஆர்வத்துடன் கேட்டறிந்தார்
Mumbai: உலக அளவில் பிரசித்தி பெற்ற மும்பை டப்பாவாலாக்களின் புகழை நேரில் கண்டு உற்சாகமாக அவர்களுடன் தன் நாளை செலவழித்தார் ராணி மாக்ஸிமா.

நெதர்லாந்து ராணி மாக்ஸிமா கடந்த திங்கள் கிழமை இந்தியாவுக்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வந்தார். இவர் இன்று காலை மும்பையில் உள்ள அந்தேரி ரயில் நிலையம் சென்றார். அங்கு வசிக்கும் மும்பை டப்பாவாலாக்களிடம், உலகப் பிரசித்தி பெற்ற இந்த முறையை எப்படி சரியாகச் செய்து முடிக்கிறார்கள் என வியந்து கேட்டறிந்தார் ராணி.

நெதர்லாந்து ராணி மாக்ஸிமாவை மேள தாளங்களுடன் வரவேற்ற மும்பை டப்பாவாலாக்கள் தயாராக இருந்தனர். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக மேள தாளத்துக்கு ராணியின் பாதுகாவலர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதையடுத்து பாரம்பரியம் மிக்க மஹாராஷ்டிரிய வரவேற்பு முறையில் ராணி மாக்ஸிமாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 

சுமார் 30 நிமிடங்களுக்கு 150 டப்பாவாலாக்கள் உடன் பேசினார் ராணி மாக்ஸிமா. ராணி மாக்ஸிமாவுக்கு சாப்பாடு டப்பாக்கள் வைக்க உபயோகப்படுத்தப்படும் மரத்தால் ஆன கூடையை டப்பாவாலாக்கள் தங்களது சங்கம் சார்பில் பரிசாக அளித்தனர்.

இந்த டப்பாவாலாக்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை ராணி மாக்ஸிமா ஆர்வத்துடன் கேட்டறிந்தார். 5000 டப்பாவாலாக்கள் இணைந்து தினமும் மதியம் சுமார் 2 லட்சம் சாப்பாட்டு டப்பாக்களை மும்பை முழுவதும் விநியோகித்து வருகின்றனர்.

 
இந்த முறையைக் கேட்டறிந்த ராணி மிகவும் வியப்படைந்தார். கூட்டம் நிறைந்த மும்பை சாலைகளிலும், புறநகர் ரயில்களிலும் இந்த டப்பாவாலாக்கள் பயணம் செய்து சரியான நேரத்துக்கு விநியோகம் செய்யும் முறையை மாக்ஸிமா வெகுவாகப் பாராட்டினார்.

Advertisement
இதேபோல், இங்கிலாந்து அரச குடும்பத்துடனும் மும்பை டப்பாவாலாக்கள் மிகுந்த நெருக்கம் உடனே இருந்து வருகின்றனர். இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியினரின் திருமணத்துக்கு மும்பை டப்பாவாலாக்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது. இதேபோல், சமீபத்தில் நடந்த இங்கிலாந்து இளவரசர் ஹாரி- மேகன் மார்க்லே தம்பதியினரின் திருமணத்துக்கும் மும்பை டப்பாவாலாக்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது. இத்தம்பதியினருக்கு மும்பை டப்பாவாலாக்கள் சங்கம் சார்பில் பட்டுபுடவை, மராட்டிய வேட்டி சட்டை ஆகியவை திருமணப் பரிசாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement