ரூ.70 ஆயிரத்தில் பிறப்புச் சான்றிதழ் தயார் செய்து தருவதாகவும் கூறுகிறார்.
Namakkal: 30 வருடங்களாக பிறந்த குழந்தையை விற்பனை செய்து வருவதாக பெண் செவிலியர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுதொடர்பாக சம்பந்தபட்ட அந்த செவிலியரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
செவிலியிரின் ஆடியோ வைரலானதை தொடரந்து, சுகாரதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், அந்தப் பெண் கூறுவது குறித்து புகார் அளிக்க சுகாதார மற்றும் கிராமப்புற நலத்துறை துறையின் இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியாகியுள்ள அந்த ஆடியோவில், குழந்தை இல்லாத ஒருவர் அந்த செவிலியரிடம் பேசுகிறார். செவிலியராக பணியாற்றிய தான், 10 ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாகவும், 30 வருடமாக ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
பிறந்த பெண் குழந்தைகள் ரூ.2.75 லட்சத்திற்கு விற்பனை செய்வதாகவும், குழந்தைகள் நிறமாகவும், அழகாகவும் இருக்கும்பட்சத்தில் ரூ.3 லட்சம் வரை விற்பனை செய்வதாக கூறுகிறார்.
இதேபோல், புதிதாக பிறந்த ஆண்குந்தைகளுக்கு 3 லட்சத்திற்கு விற்பனை செய்வதாகவும், அழகாக இருந்தால், 3.75 முதல் 4 லட்சம் வரை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும், அந்த பெண் ரூ.70 ஆயிரத்தில் பிறப்புச் சான்றிதழ் தயார் செய்து தருவதாகவும் கூறுகிறார். இதற்கு பின்னணியில் பெரும் கும்பல் உள்ளதாக போலீசார் சந்தேகப்பட்டு வருகின்றனர்.
ஆடியோவில் பேசும் அந்த பெண் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றியுள்ளார். இவர் மருத்துவமனை ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டு புதிதாக பிறக்கும் குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.