This Article is From Oct 18, 2018

மூத்த அரசியல் தலைவர் என்.டி. திவாரி காலமானார்

உடல் நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரும் மூத்த அரசியல்வாதியுமான என்.டி. திவாரி காலமானார்

மூத்த அரசியல் தலைவர் என்.டி. திவாரி காலமானார்

டெல்லியி மேக்ஸ் மருத்துவமனையில் திவாரியின் உயிர் பிரிந்தது.

ஹைலைட்ஸ்

  • ND Tiwari was admitted to the hospital since September last year
  • ND Tiwari was suffering from fever and pneumonia
  • He had been the chief minister of both Uttarakhand and UP
New Delhi:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த என்.டி. திவாரி உத்தரகாண்ட் மாநில முதல்வர் மற்றும் சில மாநிலங்களில் கவர்னர் என முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

கடந்த 1990-களின்போது காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக இவரை நியமிக்க பேச்சுகள் அடிபட்டனர். 1994-ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய திவாரி பின்னர் திவாரி காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.

பின்னர் ஒருகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை சோனியா காந்தி ஏற்றபோது, என்.டி.திவாரி மீண்டும் காங்கிரசில் இணைந்தார். உத்தரகாண்டின் முதல் அமைச்சராக என்.டி. திவாரி கடந்த 2002 முதல் 2007 வரை பொறுப்பில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதத்தின்போது, அவரது உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஐ.சி.யு.வில் வைத்து அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இருப்பினும்சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் இன்று பிரிந்தது. இன்று அவருக்கு 93-வது பிறந்தாள். அதுவே அவரது மறைந்த நாளாகவும் மாறிவிட்டது.

திவாரியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் வெளியிட்டுள்ளனர். ஆந்திராவின் கவர்னராக 2 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். அவருக்கு 86 வயதில் அவர் கவர்னராக இருந்தபோது பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி சர்ச்சைக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

.