ஜெயலலிதா தலைமையில் 2011 ஆம் ஆண்டு அமைந்த தமிழக அரசின் கீழ் அமைச்சராக பொறுப்பேற்றிருந்தவர் செந்தில்பாலாஜி. ஜெயலலிதா 2016-ல் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அவர் தொடர்ந்து ஓரங்கட்டுப்பட்டு வந்தார். சசிகலாதலைமையில் அதிமுக உடைந்தபோது, அவருக்கு ஆதரவு தெரிவித்தார் செந்தில் பாலாஜி. சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில்சிறைக்குச் சென்ற பிறகு தினகரன் முகாமில் முக்கியப் புள்ளியாக செயல்பட்டு வந்தார்.
தினகரன் சென்ற ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தபோது, முன்னணி நிர்வாகிகளுள் ஒருவராகநியமிக்கப்பட்டார். திடீரென தினகரனுடன் ஏற்பட்ட உரசல் காரணமாக, அமமுக-விலிருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன்ஸ்டாலின் தலைமையில் திமுக-வில் இணைந்தார்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜி, தான் இருந்த அனைத்துக் கட்சிகளிலும் அம்மாவட்டத்தின் முக்கியப் புள்ளியாகவிளங்கி வந்தார். திமுக-வில் செந்தில் பாலாஜி இணைந்த பின்னரும், ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பொதுக் கூட்டம்அங்கு நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று அவர் அம்மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கரூர் மாவட்ட கழகச் செயலாளர் நன்னியூர்இராஜேந்திரன், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக கரூர் வி.செந்தில் பாலாஜி அவர்கள் கரூர் மாவட்டக்கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட கரூர் மாவட்டக் கழக நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.