This Article is From Dec 14, 2018

‘செந்தில் பாலாஜிதான் எங்க கட்சியே இல்லையே…’- கலாய்க்கும் அதிமுக

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அக்கட்சியில் இணைந்துள்ளார்

‘செந்தில் பாலாஜிதான் எங்க கட்சியே இல்லையே…’- கலாய்க்கும் அதிமுக

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அக்கட்சியில் இணைந்துள்ளார். இது குறித்து தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேலி செய்யும் விதத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுக-வுக்கு ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருந்தபோதே, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பிடுங்கப்பட்டு, கட்சியில் ஓரங்கட்டப்பட்டார். இதையடுத்து சசிகலா தலைமையிலான அதிமுக அணிக்கு, தனது ஆதரவை தெரிவித்து வந்தார் செந்தில். தொடர்ந்து டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்த போது, அதன் அமைப்புச் செயலாளராக ஆனார். இந்நிலையில், தினகரனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, திமுக-வில் செந்தில் பாலாஜி இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி, திமுக-வில் இணைந்தது குறித்து ராஜேந்திர பாலாஜி, ‘அவர் தான் எங்கள் கட்சியே கிடையாதே. அவர் அமமுக-வில் இருந்தவர். அந்தக் கட்சியிலிருந்து விலகியதால், டிடிவி தினகரன், அவரைக் கண்டித்துள்ளார். இதனால் எங்களுக்கு என்ன இருக்கிறது. செந்தில் பாலாஜி, திமுக-வில் போய் சேர்ந்துள்ளதால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை, நட்டமும் இல்லை' என்று கூறியுள்ளார்.

.