இன்னும் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளர்கள் யார் என்ற முடிவு எடுக்கப்படவில்லை.
Washington: துளசி கப்பார்ட் 2020ல் நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு தான் போட்டியிடவிருப்பதாக கூறியுள்ளார். இந்து மதத்தை சேர்ந்த இவர் 4 முறை ஹாவாயிலிருந்து ஜனநாயக கட்சியின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். முதல் முறையாக அதிபர் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
37 வயதான கப்பார்ட், "நான் உறுதியாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்" என்று கூறியுள்ளார். ஒருவேளை அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவின் முதல் இந்து அதிபராகவும், முதல் இளம் மற்றும் பெண் அதிபராகவும் இருப்பார்.
''நாடு செல்லும் பாதையை கவனமாக உற்று நோக்குகிறேன்". 2020ல் ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிடுவதற்கு முன், சொந்த கட்சியில் உள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர்களை வெல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக கூறினார்.
இதுகுறித்து கப்பார்ட் சில வாரங்களாக இந்திய-அமெரிக்கர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
2020 அதிபர் தேர்தலுக்கான அட்டவணைகள் பிப்ரவரி 3, 2020ல் துவங்குகிறது. குடியரசு கட்சி மீண்டும் ட்ரம்ப்பை களமிறக்கவுள்ளது. ஆனால், இன்னும் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளர்கள் யார் என்ற முடிவு எடுக்கப்படவில்லை.
ஆனால் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடேன், செனட் அறுப்பினர்கள் எலிசபெத் வாரன், க்றிஸ்டன் கில்லிப்ராண்ட், டிம் கெய்ன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் பெயரும் முன்னிருத்தப்படுகின்றன.