Read in English
This Article is From Jun 27, 2020

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா! டெல்லியில் இன்று முதல் செரோலாஜிக்கல் பரிசோதனை!!

சமூகத்தில் கண்காணிப்புக்கு செரோலஜி (ஆன்டிபாடி) சோதனைகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது அறிகுறியற்றவர்கள் மீது கூட அவை பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • டெல்லியில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 77,240 ஆக அதிகரித்துள்ளது.
  • செரோலாஜிகல்(நோய் எதிர்ப்பு திறன்) கணக்கெடுப்பு டெல்லியில் நடத்த முடிவு
  • ஜூன் 27 முதல் ஜூலை 10 வரை இந்த கணக்கெடுப்பு நடக்கும்
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5 லட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில் டெல்லியில், கடந்த 24 மணி நேரத்தில் 3,460 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 77,240 ஆக அதிகரித்துள்ளது. அதே போல கடந்த 24 மணி நேரத்தில் 2,326 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது 47,091 நபர்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்நிலையில், செரோலாஜிகல்(நோய் எதிர்ப்பு திறன்) கணக்கெடுப்பு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலமாக பரிசோதனையை ஜூன் 27 முதல் ஜூலை 10 வரை டெல்லி அரசாங்கமும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையமும் (என்சிடிசி) கூட்டாக மேற்கொள்ளும்.

உத்தியோகபூர்வ உத்தரவுப்படி, டெல்லியின் அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து பிரிவுகளையும், வயதினரையும் சேர்த்து மொத்தம் 20,000 சோதனைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களின் துணை ஆணையர்கள் கணக்கெடுப்பு கள குழுக்களை ஒருங்கிணைப்பார்கள்.

இந்த நடைமுறையானது நகரத்தில் COVID-19 பற்றிய விரிவான பகுப்பாய்வை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உதவும், பின்னர் தேசிய தலைநகரில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு பரந்த மூலோபாயத்தைத் தயாரிக்க முடியும் என்று அமைச்சின் அறிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement

சமூகத்தில் கண்காணிப்புக்கு செரோலஜி (ஆன்டிபாடி) சோதனைகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது அறிகுறியற்றவர்கள் கூட பரிசோதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

With inputs from PTI

Advertisement
Advertisement