This Article is From Oct 24, 2018

சாலைகள் அமைத்துவிட்டு உணவிற்கு என்ன செய்ய போகிறீர்கள்? உயர்நீதிமன்றம் கேள்வி

நாடு முழுவதும் சாலைகள் அமைத்துவிட்டு உணவிற்கு என்ன செய்ய போகிறீர்கள் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Advertisement
Tamil Nadu Posted by

சேலம் - சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்க கோரி பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ், விவசாயிகள், நில உரிமையாளர்கள் என பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாய நிலங்களை அழித்தே பெரும்பாலான சாலைகள் அமைப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அதைகேட்ட நீதிபதிகள், நாடு முழுவதும் சாலைகளை அமைத்துவிட்டு உணவுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.

மேலும், இதே நிலை தொடர்ந்தால் அடுத்த தலை முறையினர் சாப்பிட கற்களும், மணல்களும் மட்டுமே மிஞ்சும் என்றும் வேதனை தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.
 

Advertisement
Advertisement