This Article is From Jul 29, 2019

7 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை!

கடந்த ஜூலை 25 ஆம் தேதியன்று, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 4 தமிழக மீனவர்களை கைது செய்திருந்தது இலங்கை கடற்படை.

Advertisement
தமிழ்நாடு Written by

மன்னாரில் இருக்கும் இலங்கை கடற்படை முகாமுக்கு மீனவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு இருக்கினர்.

தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டி அவர்களை கைது செய்துள்ளது இலங்கை அரசு. 

ராமேஸ்வரம் மற்றும் அருகில் இருந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது. 

மன்னாரில் இருக்கும் இலங்கை கடற்படை முகாமுக்கு மீனவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு இருக்கினர். அங்கு அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

கடந்த ஜூலை 25 ஆம் தேதியன்று, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 4 தமிழக மீனவர்களை கைது செய்திருந்தது இலங்கை கடற்படை. இந்நிலையில் அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

Advertisement

தங்களது உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் மீன் வளத்தை பேணிக் காக்கவும் தொடர்ந்து எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுவோம் என்று கூறுகிறது இலங்கை கடற்படை. 


 

Advertisement
Advertisement