ஹைலைட்ஸ்
- மரிலேண்டு மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது
- 1 பெண் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர்
- துப்பாக்கிசூட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
Washington, United States: வாஷிங்டனுக்கு அருகே உள்ள அன்னபொலிஸ் நகரத்தில், வியாழன் அன்று கேப்பிடல் கசெட் என்ற பத்திரிகை அலுவலக வளாகத்தில், மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிசூட்டில் 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேப்பிடல் கசெட் பத்திரிகை நிருபர் பில் டேவிஸ் இதை பற்றி ட்விட்டரில் பதிவு செய்தார்.
தனது மேஜை அடியில் இருந்து இந்த சம்பவத்தை பதிவு செய்தார்.
ஐந்து நபர்கள் கொல்லப்பட்டன என CBS நியூஸ் தெரிவித்துள்ளது.
மேரிலாண்ட் தலைநகரமான அன்னபோலிஸில் இந்த நான்கு மாடி கட்டடம் உள்ளது.
ப்ரெசிடெண்ட் டொனால்டு டிரம்ப்க்கு இதைப் பற்றி விவரித்து உள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஒரு பெண் உட்பட 4 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ள நிலையில், துப்பாக்கிசூட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து அறிந்தவுடன் உள்ளூர் போலீஸ் பத்திரிகை அலுவலகத்துக்கு வந்துள்ளது. அப்போது, துப்பாக்கிசூடு நடத்திய நபர் ஒரு மேசையின் கீழ் ஒளிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், போலீஸ் அவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் குறித்த விவரங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. அவர், எதற்காக இந்த துப்பாக்கிசூடு நடத்தினார் என்பது குறித்தும் தகவல் இல்லை. போலீஸ் தொடர்ந்து இந்த விஷயம் குறித்து விசாரித்து வருகிறது.
கேப்பிடல் கசெட் பத்திரிகையின் ஆசிரியர் ஜிம்மி டீபட்ஸ், 'அதிர்ச்சிக்குள்ளாகி உணர்வற்று இருக்கிறேன். தயவு செய்து இந்த சம்பவம் குறித்து யாரும் தொடர்பு கொண்டு கேட்காதீர்கள்' என்று ட்விட்டர் மூலம் பதிவிட்டுள்ளார்.
பத்திரிகை அலுவலகத்தின் உள்ளேயே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது, அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.