ஐரிஷ் ஏவியேஷன் ஆணையத்திற்க்கு யுஃப்ஒ பார்ததாக வந்த தொடர் புகாரையடுத்து அந்நாட்டு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்
அயர்லாந்தின் கடற்கரையோரத்தில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் இருப்பதாகவும், பிரகாசமான விளக்கு வெளிச்சத்தில் அவ்வப்போது அது தெரிவதாக ஐரிஷ் ஏவியேஷன் ஆணையத்திற்க்கு வந்த தொடர் புகார்கள் வந்தது.
புகாரையடுத்து அந்நாட்டு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பிபிசி செய்தியின்படி கடந்த வெள்ளிக்கிழமையன்று சுமார் 06:47 மணிக்கு பிரிட்டானியா ஏர்லைன்ஸ் விமானி அங்குள்ள ஷானன் ஏர் டிராஃபிக் கட்டுப்பாட்டறைக்கு "மிகவும் வேகமாக நகரும்" ஒன்றை பார்த்த்தாக தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில் அங்கு விமான பயிற்சியோ அல்லது இராணுவ நடவடிக்கையோ என எதுவும் நடக்கவில்லை என்று கட்டுப்பாட்டறைக்கு தகவல் வந்தது.
இது குறித்து கார்டியன் பத்திரிக்கைக்கு அந்த விமானி அளித்த பேட்டியில் “அது வேகமாக நகர்ந்தது, நல்ல வெளிச்சமாக இருந்ததையும் பார்த்தேன், அந்த வெளிச்சம் இடது புறத்தில் இருந்து வடக்கே மிக வேகமாக சென்றது. மேலும் அது உடனடியாக மறைந்துவிட்டது” எனத் தெரிவித்தார்.
அப்பகுதியில் பறந்த மற்ற விமானங்களும் இதுபோன்ற பிரகாசமான விளக்குகளைக் கொண்ட யுஎஃப்ஒ (UFO) எனப்படும் வேற்று கிரக வாசிகள் பயன்படுத்தும் விமானத்தை
க் கண்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
“இது வானத்தில் இருந்து பூமியில் விழும் வால் நட்சத்திரமாக கூட இருக்கலாம்” என தனது கருத்தை ஓர்லான்டோவில் இருந்து மான்சேஸ்டர் வரை விமானத்தை ஓட்டும் வெர்ஜின் அர்லையின்ஸ் விமானி தெரிவித்தார்.
“ஓரேவிதமான பாதையை பின்தொடர்ந்து வந்த வெளிச்சம் மிக வேகமாக சென்றது. இந்த வெளிச்சம் மிகவும் பெரிதாகவும் இருந்தது” என மேலும் ஒரு விமானி தெரிவித்தார்.
இந்த வெளிச்சத்தை குறித்து தனது கருத்தை முன்வைத்த மற்ற விமானி ஒருவர் “அந்த யு.எஃப்.ஓ-க்கள் மேக் 2 வேகத்தில் (ஒலியை விட இரட்டிப்பு வேகத்தில் செல்லும் வெளிச்சம்) இருந்தது” எனத் தெரிவித்தார்.
இப்படி தொடர்ந்து வந்த செய்திகள் சமூக வலைதளங்களிலும் மக்கள் இடத்திலும் குழப்பங்களை உருவாக்கியுள்ளது. பலர் இந்த வெளிச்சத்தை அவர்களின் யூகத்திற்க்கு ஏற்றவாறு விளக்கினர்கள். அதனால், ஐரிஷ் ஏவியேஷன் ஆணையம் இந்த சம்பவத்தை குறித்து மேலும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Click for more
trending news