This Article is From Oct 16, 2018

பாலியல் துன்புறுத்தல் புகார் – காங்கிரஸ் மாணவர் அணி தலைவர் ராஜினாமா செய்தார்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாணவர் அணி தலைவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

பாலியல் துன்புறுத்தல் புகார் – காங்கிரஸ் மாணவர் அணி தலைவர் ராஜினாமா செய்தார்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பைரோஸ் கான் ராஜினாமா கடிதம் அளித்துள்ளார்

New Delhi:

காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணியில் தலைவர் பொறுப்பில் இருந்து பைரோஸ் கான் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு எதிராக பெண் ஒருவர் கடந்த ஜூன் மாதம் புகார் அளித்தார்.இதன்பின்னர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது, பைரோஸ் கானை கட்சி பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதேபோன்று, கடந்த செப்டம்பர் மாதம் பைரோஸ் கானுக்கு எதிராக அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தற்போது #MeToo பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில், கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று கூறி, தனது மாணவர் அணியின் தேசிய தலைவர் பொறுப்பில் இருந்து பைரோஸ் கான் ராஜினாமா செய்துள்ளார்.

அவரது ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் ஏதும் கிடையாது என்று பைரோஸ் கான் கூறியுள்ளார்.

.