This Article is From Sep 14, 2018

ஆர்.கே. பச்சோரி மீது பாலியல் தொல்லை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவு

தனது சக பெண் ஊழியருக்கு சுற்றுச் சூழலியலாளர் பாலியல் தொந்தரவு அளித்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக போலீஸ் தகவல்

ஆர்.கே. பச்சோரி மீது பாலியல் தொல்லை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவு

பச்சோரி மீதான பாலியல் தொல்லை வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தும்படி செய்தி வெளியிட வேண்டாம் என ஊடகங்களை டெல்லி நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது.

New Delhi:

எரிசக்தி மற்றும் வள ஆதார நிறுவனத்தின்(டெரி) தலைவராக பிரபல சூழலியலாளர் ஆர்.கே. பச்சோரி இருந்தார். அவர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவருடன் பணியாற்றும் பெண் ஒருவர் கடந்த 2015-ல் போலீசில் புகார் அளித்தார். இதன்பின்னர் சில பெண்கள் பச்சோரிக்கு எதிராக புகார் அளிக்கத் தொடங்கினர். இதையடுத்து பச்சோரியின் பதவி பறிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2015 பிப்ரவரி 13-ம் தேதி பச்சோரி மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2016 மார்ச் 1-ந்தேதி 1,400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை பச்சோரிக்கு எதிராக டெல்லி போலீஸ் தாக்கல் செய்தது. இதில் பச்சோரி குற்றம் செய்ததற்கான ஆதாரங்களும், புகார் அளித்தவர்களை மிரட்டியதற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பச்சோரிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்வதற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த புகார்தாரர், நீதிமன்ற உத்தரவு எனக்கு ஆறுதல் அளிக்கிறது. பச்சோரிக்கு எதிராக நான் நடத்திய தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது என்று கூறியுள்ளார்.

 

 

.