This Article is From Apr 04, 2020

கொரோனா பாதித்தோரை தனிமைப்படுத்த 4 மாடி கட்டிடத்தை வழங்கிய ஷாரூக் கான்!!

கொரோனா மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடி நிவாரண நிதிக்கும், மகாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதிக்கும் ஷாரூக்கான் நிதியளித்துள்ளார்.

கொரோனா பாதித்தோரை தனிமைப்படுத்த 4 மாடி கட்டிடத்தை வழங்கிய ஷாரூக் கான்!!

ரொட்டி என்ற பெயரில் அறக்கட்டளையை ஷாரூக் கான் நடத்தி வருகிறார். இதன் மூலம் மும்பையில் 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • கொரோனா பாதித்தோரை தனிமைப்படுத்த 4 மாடி கட்டிடத்தை வழங்கியுள்ளார் ஷாரூக்
  • ஷாரூக் கான், அவரது மனைவிக்கு மும்பை மாநகராட்சி நன்றி தெரிவித்துள்ளது
  • கொரோனா நிவாரண பணிக்கு பல்வேறு உதவிகளை அறிவித்துள்ளார் ஷாரூக் கான்
New Delhi:

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்காக பிரபல நடிகர் ஷாரூக் கான் மும்பையில் தனக்கு சொந்தமான 4 மாடி கட்டிடத்தை அரசுக்கு வழங்கியுள்ளார்.
 

இதற்கு மும்பை மாநகராட்சி ஷாரூக் கானுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக மும்பை மாநகராட்சியின் ட்விட்டர் பக்கத்தில், 'கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்காக ஷாரூக்கான் மற்றும் அவரது மனைவி கவுரி ஆகியோர் 4 மாடி கட்டிடத்தை, தேவையான உபகரணங்களுடன் அளித்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.' என்று கூறப்பட்டுள்ளது. 
 

கொரோனா மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடி நிவாரண நிதிக்கும், மகாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதிக்கும் ஷாரூக்கான் நிதியளித்துள்ளார்.
 

மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவுக்கு 50 ஆயிரம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை ஷாருக் வழங்கியுள்ளார். ரொட்டி என்ற பெயரில் அறக்கட்டளையை ஷாரூக் கான் நடத்தி வருகிறார். இதன் மூலம் மும்பையில் 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு குறைந்தது 10 ஆயிரம்பேர் ரொட்டி அறக்கட்டளையால் பலன் பெறுகின்றனர். 

பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் இந்த நடவடிக்கைகளால் அவரது ரசிகர்கள் #SRKOfficeForQuarantine என்ற ட்விட்டர் ஹேஷ் டேக்குகளை ட்ரெண்டாக்கியும், மீம்ஸ்களை பதிவிட்டும் வருகின்றனர். 

.