புகாரின்பேரில் நடிகர் ஷாபாஸ் மீது விசாரணை நடந்து வருகிறது.
Mumbai: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பிரபல நடிகர் ஷாபாஸ் கான் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஓஷிவாரா காவல் நிலைய போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 354 (உள்நோக்கத்துடன் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளுதல் அல்லது தாக்குதல்) மற்றும் 509 (பெண்ணை கண்ணிய குறைவாக பேசுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஷாபாஸ் சில இந்தி திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 'யுக்', தி கிரேட் மகாத்மா, பேடால் பச்சிஸி, சந்திகாந்தா மற்றும் தி ஸ்வோர்டு ஆஃப் திப்பு சுல்தான் ஆகியவற்றில் நடித்ததன் மூலம் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.
சமீபத்தில் அவர் ராம் சியா கே லவ் குஷ், தெனாலி ராமா மற்றும் தஸ்தான் ஏ மொகப்பத் சலிம் அனார்கலி ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.