This Article is From Feb 04, 2020

"ஷாஹீன் பாக், ஜாமியா துப்பாக்கிச்சூட்டில் பாஜகவின் தூண்டுதல்!" - போட்டுத்தாக்கும் மம்தா!!

'தேர்தல் நேரத்தில் மட்டும் தன்னை தானே 'நான் ஒரு "chowkidaar" (காவலாளி) என்று அழைத்துக்கொள்ளும் பிரதர் மோடி'

பாஜக தலைவர்களின் தூண்டுதல் காரணமாகவே ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் மற்றும் ஷாஹீன் பாக் போன்ற இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறிய மம்தா...

Bongaon:

மேற்கு வங்காளத்தில் போங்கோங் என்ற இடத்தில் இன்று பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக தலைவர்களை கடுமையாக சாடியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை தேச துரோகிகளைப் போல பாஜக-வினர் சித்தரிப்பதாக அவர் கூறினார். ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் மற்றும் ஷாஹீன் பாக் போன்ற இடங்களில் நடத்தப்படும் துப்பாக்கிச்சூடுகள் அங்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மக்களை பயமுறுத்தும் நோக்கில் செய்யப்படுபவை என்று அவர் தெரிவித்தார்.

மேலும், தேர்தல் நேரத்தில் மட்டும் தன்னை தானே 'நான் ஒரு "chowkidaar" (காவலாளி) என்று அழைத்துக்கொள்ளும் பிரதர் மோடியைப் போல இல்லாமல், வருடம் முழுதும் தான் மக்களை சந்தித்து, அவர்களின் குறை நிறைகளை கேட்டு அறிவதாகவும் முதல்வர் மம்தா கூறினார்.

பாஜக தலைவர்களின் தூண்டுதல் காரணமாகவே ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் மற்றும் ஷாஹீன் பாக் போன்ற இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறிய மம்தா, தான் மக்களிடையே வெறுப்பை பரப்பும் ஒரு குழுவைச் சேர்ந்தவர் அல்ல என்றும் குறிப்பிட்டார்.   

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பலர் தவறான தகவலை பரப்பி வருவதாகவும் 'அது குடியுரிமை வழங்கும் சட்டம் அல்ல. மாறாக உங்களை வெளிநாட்டவர்களாக மாற்றும் சட்டம்' என்று கூறினார். 

.