இம்மாதிரியான குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை ஒரு போதும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் கெஜ்ரிவால் டிவிட் செய்துள்ளார்
ஹைலைட்ஸ்
- சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகியுள்ளார்
- அர்விந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்
- குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது
New Delhi: தேசிய தலைநகர் டெல்லியில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள தனது வீட்டிற்குள் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது ஒரு காட்டுமிராண்டித்தனமான குற்றம் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து டெல்லி காவல்துறை தலைவரிடம் பேசியதாகவும் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் சிறுமியின் சிகிச்சையை மேற்பார்வையை செய்த கெஜ்ரிவால், “சிறுமி மயக்க நிலையில் உள்ளார். ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 24 முதல் 48 மணி நேரம் கண்காணிப்பில் இருப்பார்” என தெரிவித்துள்ளார்.
சிறுமி உடலில் பலத்த காயம் இருந்தால், அதிக அளவில் உதர போக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தன்னை பெரிதும் பாதித்துள்ளதாகவும், இம்மாதிரியான குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை ஒரு போதும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் கெஜ்ரிவால் டிவிட் செய்துள்ளார்.
மேற்கு டெல்லியில் செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கூர்மையான பொருட்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்பி சென்றுள்ளனர்.
அக்கம்பக்கத்தினர் சிறுமி ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அவரது பெற்றோருக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் அப்பகுதியில் வசிப்பவர்களை விசாரித்து பாதுகாப்பு காட்சிகளை ஸ்கேன் செய்து வருகின்றனர்.
சிறுமி முதலில் சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு எய்ம்ஸுக்கு மாற்றப்பட்டார். சிறுமியின் உடலில் தொடர்ந்து உதிரபோக்கு ஏற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“சிறுமி ஒருவர் தாக்கப்பட்டிருப்பதாக செவ்வாய்க்கிழமை எங்களுக்கு தகவல் கிடைத்தது. பிரிவு 307 (கொலை முயற்சி) மற்றும் போக்ஸோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடந்து வருகிறது” என்று மூத்த போலீஸ் அதிகாரி ஏ கோன் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் நடைபெற்ற போது சிறுமியின் பெற்றோர் பணியில் இருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகின்றது. மேலும், சிறுமியின் தலையிலும் முகத்திலும் கூர்மையான பொருளால் பல முறை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது என்று காவல்துறையின் தெரிவித்துள்ளனர்.