This Article is From Dec 26, 2018

"கிரகத்தின் சிறந்த வீரர் கோலிதான்" - ஷேன் வார்னே!

வார்னே 700வது விக்கெட்டை வீழ்த்திய நினைவை பகிர்ந்து கொண்டார். "80,000 ரசிகர்கள் முன்னிலையில் எம்சிஜியில் ஆடுவது உலகின் வேறெங்கும் கிடைக்காத அனுபவம்" என்றார்

"மெல்பெர்னில் தற்போது நடைபெற்று வரும் இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி தான் இதுவரை நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட்டுகளிலேயே சிறந்த டெஸ்ட்" என்று ஆஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். காரணம் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளபோது பாக்ஸிங் டே ஆடுவது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் "இந்தக் கிரகத்தில் உள்ள வீரர்களில் சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலிதான்" என்று பாராட்டியுள்ளார்.

ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், "இந்தத் தொடர் சுவாரஸ்யமாக கோலிதான் காரணம். அவரை போன்று ஒரு வீரர் இந்தப் பூமியில் இல்லை. ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னும் இவருக்கு சரியான போட்டியாக அணியை வழிநடத்துகிறார்" என்றார்.

வார்னே இங்குதான் தான் 700வது விக்கெட்டை வீழ்த்திய நினைவை பகிர்ந்து கொண்டார். "80,000 ரசிகர்கள் முன்னிலையில் எம்சிஜியில் ஆடுவது உலகின் வேறெங்கும் கிடைக்காத அனுபவம்" என்றார்.

கோலி தனது பந்துவீச்சு அணியை பொறுத்தமட்டில் கவலையில்லாமல் இருக்கிறார். அவர்களை அழுத்தமில்லாமல் பந்துவீச வைக்க பேட்டிங் அணி சிறப்பாக ஆட வேண்டும் என்று விரும்புகிறார். அதுவும் சரி செய்யப்பட்டால் அணியை வீழ்த்துவது கடினம் என்று கூறப்படுகிறது.

முதல் இன்னிங்ஸில் நீங்கள் எவ்வளவு முன்னிலை பெறுகிறீர்களோ அவ்வளவு அழுத்தமில்லாமல் இரண்டாவது இன்னிங்ஸை ஆடலாம் என்று கோலி பேட்ஸ்மேன்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

.