हिंदी में पढ़ें Read in English
This Article is From Nov 05, 2019

உருவாகுமா Sena - NCP - Congress கூட்டணி ஆட்சி..? - கிங் மேக்கர் Sharad Pawar வைக்கும் ட்விஸ்ட்!

Maharashtraவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது.

Advertisement
இந்தியா Edited by
Delhi:

மகாராஷ்டிராவில் (Maharashtra) தேர்தல் நிறைவடைந்து 11 நாட்கள் கடந்த பின்னரும் இன்னும் அங்கு ஆட்சியமைப்பதில் குழப்பம் நிலவி வருகிறது. தேர்தலுக்கு முன்பு கூட்டணி வைத்த பாஜக (BJP), சிவசேனாவிடம் (Shiv Sena) பெரும்பான்மை இருந்தாலும், இரு கட்சிகளுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்தலில் உள்ள பிரச்னையால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில் மாநிலத்தின் மூன்றாவது பெரும் கட்சியாக வந்த தேசியவாத காங்கிரஸின் (NCP) தலைவர் சரத் பவார் (Sharad Pawar), காங்கிரஸ் தலைவர் சோனியாக காந்தியை இன்று சந்தித்துள்ளார். சிவசேனாவுடன் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே பவார், இன்று சோனியாவை நேரில் சந்தித்துள்ளார். 

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பவார், “நாங்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பாஜக-வுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். 

தற்போதைய நிலைமையில் எங்களிடம் ஆட்சியமைப்பதற்கான பலம் இல்லை. பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளிடம்தான் அது உள்ளது. நாங்கள் அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கையைத்தான் பார்த்து வருகிறோம்.” என்று சூசகமாக பதில் அளித்துள்ளார். 

Advertisement

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. இருவரும் 

இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால் சுலபமாக மெஜாரிட்டி கிடைத்துவிடும். சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 

Advertisement

தேர்தலுக்கு முன்பே பாஜக - சிவசேனா இடையே நிறைய உரசல்கள் இருந்தன. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே, அதிகாரப் பகிர்வில் 50:50 ஃபார்முலா அமலாக்கப்பட வேண்டும் என்று சொன்னதால், இருவருக்கும் இடையிலான பிளவு மேலும் அதிகரித்தது. மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை, பாஜக, தனிப் பெரும் கட்சியாக தேர்தலில் உருவெடுத்திருந்தாலும், தனிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. பாஜக ஆட்சியமைக்க சிவசேனாவின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் சிவசேனா, ஆட்சியில் சரிபாதி பங்கு வேண்டும் என்ற கறார் கோரிக்கையை வைத்துள்ளது. இந்த கோரிக்கைதான் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிப்பதற்குக் காரணம். 

இப்படி இந்த விஷயம் தேசிய அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சிவசேனா தரப்பு, ‘பாஜக இல்லாமலேயே எங்களுக்கு 170 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது,' என்ற புதிய வெடியைக் கொளுத்திப் போட்டுள்ளது.

Advertisement


 

Advertisement