Read in English
This Article is From Sep 28, 2018

மோடிக்கு ஆதரவாக கருத்து! - அதிருப்தியில் பதவி விலகிய தாரிக் அன்வர்!

இன்று தாரிக் அன்வர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்

Advertisement
இந்தியா

Highlights

  • சரத் பவாரின் பேச்சு என்னை காயப்படுத்தியது.
  • சரத் பவாருடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார்
  • ‘ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் மோடிக்கு ஆதரவாக சரத் பவார்
New Delhi:

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் அவர் மீது கடும் அதிருப்தி அடைந்த அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தாரிக் அன்வர் இன்று தேசியவாத கட்சியில் இருந்து விலகி உள்ளார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தாரிக் அன்வரின் ராஜினாமா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், பிரதமர் மோடிக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கருத்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான தாரிக் அன்வருக்கும், கட்சி தலைவர் சரத் பவாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று தாரிக் அன்வர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், இது குறித்து தாரிக் அன்வர்,‘ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் மோடி மீது எந்த தவறும் இல்லை என மராத்தி சேனலுக்கு சரத் பவார் அளித்த பேட்டி என்னை மிகவும் காயப்படுத்தியது. இதனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், நாடளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுகிறேன் என்றார். மேலும், என்னுடைய அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை, என்னுடைய ஆதரவாளர்களுடன் கலந்தாலோசனை செய்த பின்னரே முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
 

Advertisement
Advertisement