மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை சரத்பவார் கூறியதை தொடர்ந்து இவ்வாறு கூறியுள்ளார்.
Mumbai: மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக நிச்சயம் பிரதமராக வர மாட்டார் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.
வரும் பொதுத்தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாரதிய ஜனதா உருவெடுக்க வாய்ப்பு உள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அந்த கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்ற சரத்பவார், எனினும் நரேந்திர மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமர் பதவியில் அமர வாய்ப்பு இல்லை.
ஏனெனில் மற்ற கட்சிகளுடன் ஆதரவில் அதிகாரத்தை கைபற்றும் போது, அந்த கூட்டணி கட்சிகள் மீண்டும் மோடியை பிரதமராக ஏற்க மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த 2014 தேர்தலில், 283 தொகுதிகளை பெற்றாலே ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், பாஜக கூட்டணி 326 இடங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தலில் மகராஷ்டிராவில் 48 தொகுதிகளில் 45 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என தெரிவித்த அக்கட்சியின் தலைவர் அமித்ஷாவுக்கு நக்கலாக பதிலடி கொடுத்த சரத்பவார், அவர் தவறுதலாக கூறிவிட்டார். அவர் மொத்தமாக 48 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறியிருக்க வேண்டும் என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான சரத் பவார், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து அவர் போட்டியிடுவதாக இருந்தது. எனினும் அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் தனது குடும்பத்தினர் 2 பேர் போட்டியிடுகின்றனர் என்றும் கூறியிருந்தார்.