வீடியோ காட்சிகளை பார்த்தபோது உண்மையிலேயே சுறா மீன் தான் கண்டு அதிர்ச்சியடைந்ததாக கூறுகிறார்கள்.
புளோரிடாவில் ஏழு வயது சிறுவன் குட்டி சுறாமீனைக் கண்டு பயந்து சர்ஃபிங் போர்டிலிருந்து கீழே விழுகிறான். சிறுவனின் பயந்து ஓடும் வீடியோவை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஷாண்டலர் மோர் என்னும் சிறுவன் தன் குடும்பத்துடன் சனிக்கிழமை நியூ ஸ்மிர்னா கடற்கரைக்கு சென்றனர். சிறுவனின் தந்தை சி.என்.என் பத்திரிகையிடம் கடற்கரையில் நெரிசல் அதிகமாக இருந்தது. மகன் ஷாண்லர் மூர் தண்ணீரில் குதித்து வந்த சுறாவைக் கண்டு சர்ஃபிங் பலகையை விட்டு கடலுக்கு குதித்தாக கூறினார்.
நான் சுறா மீனைக் கண்டதும் பயந்து விட்டேன். சுறா மீன்தான் என்னை தாக்கியது என்று நினைத்தேன் என்று சிறுவன் கூறினான்.
வீடியோ காட்சிகளை பார்த்தபோது உண்மையிலேயே சுறா மீன் தான் கண்டு அதிர்ச்சியடைந்ததாக கூறுகிறார்கள்.
ஷ்மிர்னா கடற்கரையில் சுறா இருப்பது மிகவும் இயல்பான ஒன்றாகும். வல்லுநர்கள் இந்த பகுதியை சுறா தாக்குதல் உள்ள தலைநகரம் என்று அழைக்கின்றனர்.சுறா 10 அடிக்குள்ளானதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினால் ஷாண்டலர் மோர் உற்சாகத்தை குறைத்துக் கொள்ளவில்லை. கூடுதல் உற்சாகத்துடன் சஃர்பிங் செய்வதாக செய்தி வலைத்தளம் கூறியுள்ளது.
Click for more
trending news