Read in English
This Article is From Oct 15, 2018

அயோத்தி விவகாரம் தொடர்பான கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது - சசி தரூர் கண்டனம்

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சசி தரூர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட நல்ல இந்து விரும்ப மாட்டார் என்று பேசியதாக தகவல்கள் பரவியது.

Advertisement
இந்தியா

ராமர் கோயில் தொடர்பான கருத்து தனது சொந்த எண்ணம் என்றும் அது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அல்ல என்றும் சசி தரூர் கூறியுள்ளார்.

New Delhi:

சென்னையில் நேற்று நடந்த இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பாபர் மசூதி மற்றும் ராமர் கோயிலை தொடர்புபடுத்தி கருத்து ஒன்றை அவர் தெரிவித்தார். இது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.

ராமர் கோயில் குறித்து அவர் பேசுகையில், நல்ல மனம் படைத்த இந்துக்கள் எவரும் மற்றொருவரின் வழிபாட்டு தலத்தை இடித்து விட்டு அதில் கோயிலை கட்டுவதற்கு விரும்ப மாட்டார்கள் என்று கூறினார். ஆனால் அவர், பாபரி மசூதி இருந்த இடத்தில் கோயிலை கட்டுவதற்கு எந்தவொரு நல்ல இந்துவும் விரும்ப மாட்டார்கள் என்று கூறியதாக தகவல்கள் பரவியது.

இதனால் பல்வேறு அமைப்புகள் சசி தரூருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. சென்னையில் பேசிய சசி தரூர், நான் ஒரு இந்து என்பதில் உறுதியாக உள்ளேன். பெரும்பாலான இந்துக்கள் அனைவரும் அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்கிற நம்பிக்கையில் உள்ளனர். இதன் காரணமாக அயோத்தியில் ராமருக்கு கோயில் இருக்க வேண்டும் என்று பெரும்பாலான இந்துக்கள் விரும்புகின்றனர்.

Advertisement

அதே நேரத்தில், மற்றொரு மதத்தவரின் வழிபாட்டுத் தலத்தை இடித்து விட்டு அந்த இடத்தில்தான் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதை எந்தவொரு நல்ல மனம் படைத்த இந்துக்களும்விரும்ப மாட்டார்க்ள என்று கூறினார்.

இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் நலின் கோலி அளித்துள்ள பேட்டியில், நல்ல இந்து, கெட்ட இந்து என்ற சான்றிதழை யார் கொடுப்பது? யார் இந்த சசி தரூர்? கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையுடன் காங்கிரசும், சசி தரூரும் எப்படி விளையாட முடியும் என்று கூறியுள்ளார்.

Advertisement

இந்த நிலையில் தனது பேச்சு தவறாக பரப்பப்பட்டு விட்டதாக சசி தரூர் விளக்கமும், கண்டனமும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர், “ எனது பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டு பரப்பப்பட்டு உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். பெரும்பாலான இந்துக்கள் ராமர் பிறந்த அயோத்தியில் அவருக்கு கோயில் கட்ட வேண்டும் என்று விரும்புகின்றனர். அதேநேரத் மற்றொரு மதத்தவரின் புனித தலத்தி இடித்து விட்டு அதில் கோயில் கட்ட வேண்டும் என்று நல்ல இந்துக்கள் விரும்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், சசி தரூர் சொல்வதைப் பார்த்தால் உண்மையான இந்துக்கள் யாரும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை விரும்ப மாட்டார்கள் எனறு கூறுவதைப் போல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisement