பிரதமர் தனது கடமைகளை செய்யாமல் ஏமாற்றிவிட்டார் என சசி தரூர் குற்றச்சாட்டு
Bengaluru: கடந்த வெள்ளிகிழமையன்று பெங்களூரில் நடைபெற்ற ஒரு விழாவில் தனது புத்தகமான ‘தி பாராடாக்சிகல் பிரைம் மினிஸ்டர்'-யிலிருந்து சில பகுதிகளை வாசித்த காங்கிரஸ் தலைவர்களூள் ஒருவரான சசி தரூர், செய்தியாளர்களிடம் பேசியபோது பிரதமர் மோடியை ‘ நம்ப முடியாத மாயை' என குற்றம் சாட்டினார்.
‘மத்திய அரசுக்கு எதிராக பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர், மோடி நம் எல்லாரையும் ஏமாற்றிவிட்டார். மக்கள் தங்களது வாக்குகளை நாட்டில் நடக்கும் கலவரத்திற்காகவும், மாடு மீது இருக்கும் கவனத்திற்காகவும் அளிக்கவில்லை, ஆனால் மோடி தான் தந்த பல வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை என சசி தரூர் கூறினார்.
மேலும் செய்தியாளர்கள் நடக்கவிருக்கும் 5 மாநில தேர்தல்களை குறித்து சசி தரூரிடம் கேட்டபோது ‘தேர்தலில் வெற்றிபவர்கள் கட்டாயமாக மோடி ஆட்சியால் ஏமாற்றப்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள்' என தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில் சபரிமலையில் பி.ஜே.பி நடத்தும் கடுமையான போராட்டங்களை தான் எதிர்ப்பதாகவும் ‘நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்க வேண்டும்' என கூறினார்.
‘சட்டத்தால் கொண்டு வந்த விதியை ஏற்கமுடியவில்லை என்றால் அரசு நாடாளுமன்றத்தில் இதற்கு சீர் திருத்தங்களை கொண்டுவரவேண்டும், அதற்க்கு பதிலாக இப்படி ‘கேவலமாக' கோவில்களில் கலவரங்களை உண்டாக்குவது தவறு'என்றார்.
மேலும் மாநில அரசிடம் கேட்காமல், பெண் பக்தர்களை சபரிமலைக் கோவிலுக்குள் அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக நிறைவேற்றியது ஏன் என கேள்வி எழுப்பினார்.
அகஸ்தா வெஸ்டிலாந்து முறைகேடு விவகாரத்தில் கிருஷ்டியன் மைக்கில் சார்பாக வாதாட போகும் காங்கிரஸ் யூத் சங்க உறுப்பினரான அலிஜோ கே ஜோஸப்பை, உடனடியாக நீக்கியது காங்கிரஸின் அதிருப்தியை காட்டுகிறது என்றும், யாருக்கு வாதாட வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட விருப்பம் என செய்தியாளர்களிடம் சசி தரூர் கூறினார்.