கார்த்திக் சிதம்பரம் மற்றும் மனிஷ் திவாரி ஆகியோர் இணைந்து ப. சிதம்பரத்தை சந்தித்தனர்.
New Delhi: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த மாதம் 16-ம் தேதி கைது செய்யப்பட்ட ப. சிதம்பரம், நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரான சஷி தரூர், ப. சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை தொகுதி எம்.பியுமான கார்த்திக் சிதம்பரம் மற்றும் மனிஷ் திவாரி ஆகியோர் இணைந்து ப. சிதம்பரத்தை சந்தித்தனர்.
சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சசி தரூர் பேசியதாவது: இன்று அரசியலமைப்பின் அடிப்படை கடமை மீறப்படுகிறது. இன்று 98 நாட்கள் சிறைவாசம் எதற்காக? ரூ. 9.96 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதற்காகவா…? இது இந்த வழக்கு சர்ச்சைக்குரிய பிரச்சினையும் அல்ல… இந்த செயல் மோசாமான சமிக்ஞையை காட்டுகிறது. மரியாதைக்குரிய நேர்மையான குடிமக்களை இப்படி நடத்தினால், உலகிற்கு மிகவும் மோசமான சமிக்ஞையை காட்டுகிறது. அவருடன் நாங்கள் இருக்கிறோம் என்ற ஒற்றுமையைக் காட்டவே நாங்கள் வந்தோம் என்று தெரிவித்தார்.
ரூ. 9.96 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது… சிதம்பரம் நாட்டின் மூத்த வழக்கறிஞர், அவர் நீதிமன்றத்தில் ஆஜரான 10 விநாடிகளுக்குள் இந்த பணத்தை சம்பாதிக்க முடியும் என்று கூறினார். “ நாளை அரசியலைமைப்பு நாள் மற்றும் நமது அரசியலமைப்பில் ஒரு தங்க முக்கோணம் உள்ளது. கட்டுரை 14,19 மற்றும் 21 இதன் பொருள் அரசியலமைப்பின் கீழ் உள்ள உரிமைகள் பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதாகும். அவரது ஜாமீன் மனு நாளை விசாரிக்கப்படுகிறது அரசியலமைப்பின் அடிப்படையில் சரியான முடிவு எடுக்கப்படும் என்றும் சட்டவிரோத காவலிருந்து அவர் விடுவிக்கப்பட வேண்டுமெனவும் அவருக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் என்று திவாரி செய்தியாளர்களிடம் திவாரி தெரிவித்தார்.