हिंदी में पढ़ें Read in English
This Article is From Apr 16, 2019

கணவர் காங்கிரஸ்; மனைவி சமாஜ்வாதி கட்சி! பிரபல நடிகரின் குடும்ப அரசியல்!!

கட்சியில் இணைந்த பூனம் சின்ஹாவை சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் டிம்பிள் யாதவ் வரவேற்றார்.

Advertisement
இந்தியா Edited by
Lucknow:

பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹாவின் மனைவி பூனம் சின்ஹா சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்துள்ளார். அவரை கட்சியின் மூத்த தலைவர் டிம்பிள் யாதவ் வரவேற்றார்.

இந்தியில் பிரபல நடிகராக இருப்பவர் சத்ருகன் சின்ஹா. இவர் பிரபல நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் தந்தை ஆவார். கடந்த 30 ஆண்டுகளாக பாஜகவில் இடம்பெற்றிருந்த சத்ருகன் சின்ஹா, அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்.

பிரதமர் மோடியின் செயல்பாடுகளை அவர் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், இந்த கட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சத்ருகன் சின்ஹாவின் மனைவி பூனம் சின்ஹா, சமாஜ்வாதி கட்சியில் இன்று சேர்ந்தார். இன்று அவரை கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் வரவேற்றார்.

Advertisement

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் எதிரிக் கட்சிகளாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கணவர் சத்ருகன் சின்ஹா காங்கிரசிலும், மனைவி பூனம் சின்ஹா சமாஜ்வாதி கட்சியிலும் இடம்பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பூனம் சின்ஹா சமாஜ்வாதி கட்சி சார்பாக லக்னோ மக்களவை தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு போட்டியிட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement