This Article is From Aug 16, 2018

மழைநீர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை: சென்னையில் பரபரப்பு

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை நலமுடன் உள்ளதாக தெரிவித்துள்ளனர்

மழைநீர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை: சென்னையில் பரபரப்பு
Hyderabad/Chennai:

சென்னை: பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை மழைநீர் கால்வாயில் இருந்து பொதுமக்கள் மீட்டுள்ளனர்.

சுதந்திர தினத்தன்று காலையில், சென்னை வளசரவாக்கம் பகுதியில், மழைநீர் கால்வாயில் இருந்து குழந்தையின் அழுகை குரல் கேட்டுள்ளது. மழைநீர் கால்வாயை சுற்றி பூனைகள் நின்று கொண்டிருப்பதை பால்காரர் ஒருவர் கண்டுள்ளார்.

அப்பகுதியில் வசிக்கும் கீதா என்ற பெண்மணி, இதனை கண்டுள்ளார். அப்போது, பூனைகளை விரட்டியடித்து பார்த்த போது, பச்சிளம் குழந்தை உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக குழந்தையை மீட்ட பெண்மணி, கழுத்தில் சுற்றியிருந்த தொப்புள் கொடியை அகற்றி, முதலுதவி செய்த பின் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார்.

சென்னை எழும்பூர் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை நலமுடன் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

“சுதந்திர தினத்தன்று கிடைத்ததால், இந்த குழந்தைக்கு சுதந்திரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது” என்று குழந்தையை மீட்ட கீதா தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், குழந்தையை மீட்ட பெண்மணிக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளன. குழந்தையை மீட்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளன.

.