This Article is From Jun 30, 2018

பெண்ணின் கருப்பையில் இருந்து எடுக்கப்பட்ட 50 பவுண்ட் எடையுள்ள கட்டி!

கேலாவின் கருப்பையில் தர்பூசணிப் பழத்தின் அளவில் ஒரு பெரிய கட்டி இருப்பது தெரிய வந்துள்ளது

பெண்ணின் கருப்பையில் இருந்து எடுக்கப்பட்ட 50 பவுண்ட் எடையுள்ள கட்டி!
Washington:

அமெரிக்காவின் வாஷிங்டன்னைச் சேர்ந்த கேலா ரான் என்ற பெண், பல மாதங்களாக வயிற்று வலி, வயிறு உபசல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல் எடையும் அளவுக்கு மிஞ்சி போய்க் கொண்டிருந்தது. பார்ப்பவர்கள் எல்லாம் கேலா கர்ப்பமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு வாழ்த்தவும் செய்துள்ளனர்.

ஆனால் பிரச்சனை தொடரவே, சமீபத்தில் மருத்துவரிடம் சென்ற கேலாவுக்கு தனக்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதிர்ச்சி அடைந்தார். கேலாவின் கருப்பையில் தர்பூசணிப் பழத்தின் அளவில் ஒரு பெரிய கட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த கட்டி கேலாவின் உடலில் உள்ள மற்ற உள் உறுப்புகளை நசுக்கி வருவதும் தெரியவந்துள்ளது. ஆபத்தான கட்டத்தை எட்டியதால் உடனடி அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

மே மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் 50 பவுண்ட் எடை கொண்ட கட்டி, கேலாவின் கருப்பையில் இருந்து நீக்கப்பட்டது. இதுவரை இவ்வளவு பெரிய கட்டியை நாங்கள் கையாண்டது இல்லை என்கின்றனர் அலபாமாவைச் சேர்ந்த ஜாக்சன் மருத்துவமனை மருத்துவர்கள்.

kayla

கேலாவுக்கு வந்திருப்பது, ஒரு வகையான டியூமர் கட்டி என்றும், அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்தது என்றும் தெரிவித்துள்ளனர். கட்டி நீக்கப்பட்ட பின், 70 பவுண்டுகள் எடை குறைந்திருப்பதாக கூறுகிறார் கேலா.

பல நாட்களாக தான் பட்ட வேதனைக்கு தீர்வு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் கேலா ரான்.



(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)

.