தரையில் இருந்த அந்த மூக்கினை கையால் எடுத்துள்ளார்.
லண்டன் நகரைச் சேர்ந்த பெண்ணொருவரின் ஃபேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. ஜாடே முர்ரே என்ற பெண் தன்னுடைய வீட்டின் தரையில் நாயின் மூக்கு கீழே கிடப்பதை கண்டுள்ளார். அதைப் பார்ததும் ‘தன் நாய்க்குத்தான் ஏதோ ஆகிவிட்டதோ; வலியினால் என்ன கஷ்டப்படுகிறதோ' உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது கூட தெரியாமல் குழம்பி போய் பயந்துள்ளார்.
‘அம்மா நாயைப் பற்றிக்கேட்டாள் என்ன சொல்ல…?' என்று விதவிதமாக கற்பனைகளை செய்து பயந்து போன அப்பெண் மனதில் தைரியத்தை ஏற்படுத்திக் கொண்டு தரையில் இருந்த அந்த மூக்கினை கையால் எடுத்துள்ளார்.
எடுத்துப் பார்த்தப் பின் தான் அது நாய் பொம்மையின் மூக்கு என்று தெரிந்துள்ளது. பெண்ணின் முட்டாள்தனமான பயத்தை எண்ணி பலரும் வாய்விட்டு சிரித்துள்ளனர். இந்த ஃபேஸ்புக் போஸ்ட்டினை 1 லட்சம் பேர் பகிர்ந்துள்ளனர். 2 லட்சம் பேர் கமெண்ட் செய்துள்ளனர்.
Click for more
trending news