Read in English
This Article is From Jan 10, 2019

டெல்லி காங்கிரஸ் தலைவராக ஷீலா தீட்சித் நியமனம்!

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஷீலா தீட்சித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement
இந்தியா
New Delhi:

டெல்லி காங்கிரஸ் தலைவராக இருந்த அஜய் மாக்கன் கடந்த 4ஆம் தேதி உடல் நலக் குறைவு காரணம் சொல்லி விலகினார். முன்னாள் மத்திய அமைச்சரான அஜய் மக்கான் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக 4 ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்றார். டெல்லியில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ், படுதோல்வியை சந்தித்ததையடுத்து, அஜய் மக்கானுக்கு இந்த பதவி வழங்கப்பட்டது.

கடந்த 2017ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே அஜய் மக்கான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டதையடுத்து பதவியை தொடர்ந்தார். இதையடுத்து, அஜய் மாக்கன் கடந்த 4ஆம் தேதி உடல் நலக் குறைவு காரணம் சொல்லி விலகினார்.

இதையடுத்து, புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக, காங்கிரஸின் புதிய தலைவரின் பெயர் குறித்து சக்தி செயலி (ஆப்) மூலம் தொண்டர்களின் விருப்பத்தைக் காங்கிரஸ் மேலிடம் சேகரித்து வந்தது. புதிய தலைவர் தேர்வில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உள்பட மூத்த தலைவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில், தொடர்ந்து மூன்று முறை டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்துக்கு புதிய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement