This Article is From Apr 22, 2019

டெல்லியில் காங். தனித்துப்போட்டி: 6 வேட்பாளர்கள் பெயர் வெளியீடு! ஷீலா தீட்சித் போட்டி!

Congress candidate list 2019 Delhi: மக்களவைத் தேர்தல் 2019: டெல்லியில் வடகிழக்கு பகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வரும், டெல்லி காங்கிரஸ் தலைவருமான ஷீலா தீட்சித் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி காங்கிரஸ் கட்சி தலைவராக ஷீலா தீட்சித் சமீபத்தில் அறிவிக்கப்பட்டார்.

New Delhi:

Congress Delhi Candidate List: டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதில், டெல்லியில் 3 முறை முதல்வராக இருந்தவரும், டெல்லி காங்கிரஸ் தலைவருமான ஷீலா தீட்சித் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னரும் அது தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தரப்பு தனது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

அதில் 6 தொகுதிக்கான வேட்பாளர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது. மேலும் ஒரு தொகுதிக்கான வேட்பாளர் இன்னும் இறுதிசெய்யப்பட வேண்டியுள்ளதாக தெரிகிறது. டெல்லியில் வரும் மே.12ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.

5489if0g

டெல்லியின் வடகிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில், சமீபத்தில் டெல்லி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ஷீலா தீட்சித் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது முன்னோடியான அஜய் மேக்கான் புது டெல்லியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதைபோல், கிழக்கு டெல்லி தொகுதியில் அரவிந்தர் சிங் லவ்லியும், சாந்தினி செளவுக் தொகுதியில் ஜெ.பி.அகர்வாலும், வடமேற்கு தொகுதியில் ராஜேஷ் லிலோத்தியாவும், மேற்கு டெல்லியில் மஹாபால் மிஷ்ராவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதில், ஷீலா தீட்சித் எங்கு போட்டியிட உள்ளார் என்பதை அவரே தேர்வு செய்யலாம் என்று காங்கிரஸ் தலைமை கூறியதாகவும், அவரே வடகிழக்கு டெல்லியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதேபோல், மக்களவைத் தேர்தலில் தனித்துப்போட்டியிடும் ஆம் ஆத்மி கடந்த வாரம் தனது வேட்பாளர் பெயர் பட்டியலை வெளியிட்டது. காங்கிரஸ் கூட்டணிக்காக பல கட்ட பேச்சுவராத்தையை ஆம் ஆத்மி நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது.

கடந்த 2014 தேர்தலில் பாஜக டெல்லியின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

.