ஷில்லாங்கில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது
ஹைலைட்ஸ்
- ஷில்லாங்கில் கடந்த வியாழக்கிழமை இரு சமூகத்திடரிடையே மோதல் ஏற்பட்டது
- அந்த மோதலின் போது மூவருக்கு காயம் ஏற்பட்டது
- இணைய சேவை மற்றும் குறுஞ்செய்தி அனுப்பும் சேவை தடை செய்யப்பட்டுள்ளது
Shillong:
வட கிழக்கு மாநிங்களில் ஒன்றான ஷில்லாங்கில், இரு சமூகத்தினரிடயே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஷில்லாங்கைச் சேர்ந்த பேருந்து நடத்துனர் ஒருவரை தெம் லூ மவ்லாங் என்ற பகுதியைச் சேர்ந்த சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பேருந்து நடத்துனரின் சமூகத்துக்கும் அவரைத் தாக்கியவரின் சமூகத்துக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை போலீஸ் தடுத்ததால், அவர்கள் மீது கோபம் கொண்டனர் கலவரத்தில் ஈடுபட்டவர்கள். இந்த மோதலின் போது, 5 சிறுவர்களுக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், ஷில்லாங் பகுதியில் ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும், இரவு நேரத்தில் வெளியே வர மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை மீறியும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, கலவரக்காரர்கள் போலீஸை தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஒரு வீடு, ஒரு கடை மற்றும் 5 வாகனங்கள் சூரையாடப்பட்டன. மேலும் ஒரு மூத்த போலீஸ் அதிகாரிக்கும் இந்த சம்பவத்தின் போது காயம் ஏற்பட்டது. இதனால், கிட்டத்தட்ட 500 பேருக்கு வீட்டில் வசிக்க முடியாதபடி ஆனது. அதனால், அவர்களுக்கு ராணுவத்துக்குச் சொந்தமான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த கலவரம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார் மாநில முதல்வர் சங்மா. தற்போது, அங்கு நிலைமை பரவாயில்லை என்று கூறப்படுகிறது. இருந்தும், இரவு நேரத்தில் வெளியே வர மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இணைய சேவையும், குறுஞ்செய்தி அனுப்பும் சேவையும் அங்கு தடை செய்து வைக்கப்பட்டு உள்ளது. வதந்திகள் பரவிவிடக் கூடாது என்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை கலவரத்தைத் தூண்டியதாக 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
(பிடிஐ கொடுத்த தகவலின் அடிப்படையில்)