This Article is From Jan 18, 2020

ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடல்..!- காரணம் என்ன..?

ஷீரடிக்கு வரும் பக்தர்களுக்கு இந்த அறிவிப்பால் எந்த பாதிப்பும் இருக்காது"

ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடல்..!- காரணம் என்ன..?

“தற்போது ஷீரடி குறித்து கிளம்பி வரும் வதந்திகளின் பொருட்டு ஜனவரி 19 ஆம் தேதி முதல் சாய்பாபா கோயில் மூடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்."

Shirdi:

மகாராஷ்டிராவில் இருக்கும் ஷீரடி சாய்பாபா கோயிலை காலவரையின்றி மூடுவதாக சாய்பாபா கோயில் சமாதியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, சாய்பாபாவின் பிறப்பிடம் பர்பானியில் இருக்கும் பாத்ரியில் இருக்கிறது என்று சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்திருந்தார். இதன் காரணமாகத்தான் தற்போது சாய்பாபா கோயில் மூடப்பட்டுள்ளது.

“தற்போது ஷீரடி குறித்து கிளம்பி வரும் வதந்திகளின் பொருட்டு ஜனவரி 19 ஆம் தேதி முதல் சாய்பாபா கோயில் மூடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த விவகாரத்தைப் பற்றி விவாதிக்க கிராமத்தினர் கூட்டம் ஒருங்கிணைக்கப்படும். ஷீரடிக்கு வரும் பக்தர்களுக்கு இந்த அறிவிப்பால் எந்த பாதிப்பும் இருக்காது,” என்று சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையின் பி.வாக்சாவ்ரே கூறியுள்ளார்.


 

.