हिंदी में पढ़ें Read in English
This Article is From Jun 27, 2019

சட்டையில்லாமல் போலீஸ் கார் மீது ‘புஷ்-அப்ஸ்’ எடுக்கும் நபர்; வைரல் டிக்-டாக் வீடியோ!

அந்த வீடியோவில், சட்டையில்லாமல் கார் மீது ஏறும் அந்த நபர், திடீரென்று புஷ்-அப்ஸ் எடுக்க ஆரம்பிக்கிறார். ஆள் அரவமற்ற இடத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement
நகரங்கள் Edited by

“வீடியோவில் வரும் அந்த வண்டி, தனியார் ஒப்பந்ததாரர் ஒருவருக்குச் சொந்தமானது. எங்களுக்குத் தேவைப்படும்போது அதை வாடகைக்கு எடுத்துக் கொள்வோம்”

New Delhi:

டெல்லியில் போலீஸ் கார் மீது ஏறிய நபர் ஒருவர் புஷ்-அப்ஸ் உட்பட பல உடற்பயிற்சிகளை செய்து, அதை வீடியோவாக எடுத்து டிக்-டாக் செயலியில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ படவைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், சட்டையில்லாமல் கார் மீது ஏறும் அந்த நபர், திடீரென்று புஷ்-அப்ஸ் எடுக்க ஆரம்பிக்கிறார். ஆள் அரவமற்ற இடத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. காரின் மேல் போலீஸ் விளக்கு இருப்பதும், காரின் போனட்டில் ‘டெல்லி போலீஸ்' என்று எழுதப்பட்டிருப்பதும் தெளிவாக தெரிகிறது. 

இது குறித்து டெல்லி போலீஸ் தரப்பு, “வீடியோவில் வரும் அந்த வண்டி, தனியார் ஒப்பந்ததாரர் ஒருவருக்குச் சொந்தமானது. எங்களுக்குத் தேவைப்படும்போது அதை வாடகைக்கு எடுத்துக் கொள்வோம்” என்று கூறியுள்ளது. 

“வாடகைக்கு எடுக்கும் வண்டியின் ஒட்டுநரின் நண்பர்தான், அந்த வாகனத்தின் மீது ஏறி உடற்பயிற்சி செய்கிறார். அவர் ஒரு போலீஸ் கிடையாது. இது குறித்து விளக்கம் கேட்டு, அந்த தனியார் ஒப்பந்ததாரருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று டெல்லி போலீஸின் மூத்த அதிகாரி நம்மிடம் தகவல் தெரிவித்துள்ளார். 

Advertisement


 

Advertisement