Read in English
This Article is From Oct 31, 2018

படேல் இல்லையென்றால், சோம்நாத் ஆலயம் செல்ல விசா எடுக்க வேண்டியதிருக்கும்: மோடி

சர்தார் வல்லபாய் படேல் எடுத்த முயற்சிகளே இன்றைய ஒன்றுபட்ட இந்தியாவுக்கு காரணம் என பிரதமர் நரேந்திர மோடி தனது எதிர்ப்பாளர்களை கடுமையாக தாக்கினார்

Advertisement
இந்தியா

நாட்டின் பெரும் நபர்களை நினைவு கூறுவது ஒரு குற்றமா? என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

Kevadiya, Gujarat:

 

குஜராத்தில் படேல் சிலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஒற்றுமைக்காக சர்தார் வல்லபாய் படேல் பாடுபடவில்லை என்றால், சிவபக்தர்கள் சோம்நாத் கோவிலில் பிரார்த்தனை செய்ய முடியாது.

யோசித்து பாருங்கள், இந்தியாவின் ஒற்றுமைக்காக சர்தார் வல்லபாய் படேல் பாடுபடவில்லை என்றால், இந்தியர்கள் சிங்கங்களையும், புலிகளையும் பார்க்க விசா எடுத்துச்செல்ல வேண்டிய நிலை இருந்திருக்கும், சோம்நாத் கோவிலில் பூஜை செய்ய சிவபக்தர்களுக்கு விசா தேவைபட்டிருக்கும். மேலும், ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரை பார்க்க விசா எடுக்க வேண்டியதிருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் குஜராத் பிரசாரத்தின் போது, ராகுல் காந்தியின் சோம்நாத் வருகை குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடினார். ராகுல் காந்தியின் தாத்தா, ஜவஹர்லால் நேரு சோம்நாத் கோவிலை புனரமைக்க கூட விரும்பவில்லை. ஆனால், சர்தார் வல்லபாய் படேலே சோம்நாத் கோவிலை புனரமைப்பதற்கு முன்முயற்சி எடுத்தவர். 1026ல் கஜினி முகமதால், சோமநாத் ஆலயம் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டது.

சர்தார் வல்லபாய் படேல் குறித்து விமர்சித்தவர்களை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடினார். நம் சொந்த நாட்டில் உள்ள சிலரே இந்த முன்முயற்சியை ஒரு அரசியல் பார்வையிலிருந்து பார்ப்பதை பார்த்து நாங்கள் பெரிதும் வியப்படைகிறோம், நாங்கள் ஒரு பெரிய குற்றம் செய்துள்ளதைப் போல எங்களை பெரிதும் விமர்சிக்கிறார்கள். நாட்டின் பெரும் நபர்களை நினைவு கூறுவது ஒரு குற்றமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

இந்தியாவின் ஒற்றுமைக்காக பாடுப்பட்ட சர்தார் வல்லபாய் படேல், சிலையில் அரசியல் செய்யக்கூடாது. சர்தார் படேல் நினைவாக சிலை திறப்பு என்பது ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படும் தருணம். சில விஷயங்களில் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் மன்மோகன் வைத்தியா கூறியுள்ளார்.
 

Advertisement